நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர் தான் பொறுப்பு. எனவே, அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லவில்லை என்றும் கூறியுள்ளார். 


நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் திமுக, திமுக மற்றும் அனைத்து கட்சி எம்,பி.க்கள் நேரில் வலியுறுத்துவதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றனர். இந்தநிலையில், 9 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு இருந்தும் அமித்ஷாவை சந்திக்க முடியாமல் தமிழ்நாடு எம்.பி.க்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து, தமிழக அனைத்துக்கட்சி எம்.பிக்களை, அரசியல் காரணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுப்பதாக நினைக்கிறேன் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 


நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் ஏற்கனவே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் சில மாதங்களுக்கு முன்பு பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழகத்தின்அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறைமந்திரி அமித்ஷாவை இன்று சந்தித்து பேச சென்றிருந்தார்.


ஆனால், இன்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக எம்.பி.க்களை சந்திக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தி.ஆர்.பாலு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு எம்.பி.க்களை சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.  மீண்டும் நீட் தேர்வு விலக்கு குறித்து உள்துறை அமைச்சகத்தில் மீண்டும் மனு அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 


முன்னதாக, கடந்த 4 நாட்களுக்கு முன்பு அமித்ஷா அலுவலகம் சென்ற தமிழக எம்.பிக்களை சந்திக்க அமித்ஷா மறுத்து விட்டார். இதற்கான காரணத்தையும் கூறவில்லை. எனினும் அப்பாயிண்ட்மென்ட் இல்லாமல் அமித்ஷா அலுவலகத்திற்கு சென்றனர். எனினும் அங்கிருந்த பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழக எம்பிக்களை உள்ளே விட மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து டிஆர் பாலு, அமைச்சர் அமித்ஷாவுக்கு தொலைபேசியில் பேசியும் அவர் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 


தமிழ்நாடு எம்.பிக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காமல் இருந்ததில் அரசியல் எதுவும் இல்லை என்று டி.ஆர். பாலு அப்பொழுது கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண