• ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்


பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே என, சசிகலா காலில் விழுந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மேலும் படிக்க..



  • உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..


ஜனநாயகத்தை வைத்து சூழ்ச்சி செய்வதிலும், அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றவர் என, பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே சாடியுள்ளார். நீதித்துறைக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக 600 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு கடிதம் எழுதியிருந்தனர். அதுதொடர்பாக காங்கிரஸை பிரதமர் கடுமையாக சாடியிருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார். மேலும் படிக்க..



  • 7 ஆண்டுகளாக வருமான வரியே தாக்கல் செய்யாத காங்கிரஸ் வேட்பாளர் - மயிலாடுதுறை தொகுதியில் பரபரப்பு


இந்திய நாட்டின் 18 -வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக 2024 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. மேலும் படிக்க..



  • மெட்ரோ பணிகளால், ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி விபத்தா? சென்னை மெட்ரோ விளக்கம்


ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி விபத்திற்கு, மெட்ரோ ரயில் பணிகள் காரணமல்ல என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில், மேற்கூரை இடிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கேளிக்கை விடுதிக்கு அருகே நடைபெறும் மெட்ரோ பணிகளே காரணமாகவே, கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ ஆழ்வார்பேட்ட செக்மெட் கேளிக்கை விடுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம், அப்பகுதியில் நடந்துகொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்படவில்லை என்பதை தெளிவுபடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் விரும்புகிறது. மேலும் படிக்க..



  • முகமது அசாருதீன் போட்ட ஸ்கெட்ச்! ஓவைசிக்கு எதிராக சானியா மிர்சா போட்டியா? காங்கிரஸ் பிளான்!


வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மேலும் படிக்க..