• தம்பிகள் உற்சாகம்! 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் லிஸ்ட் - டாக்டர் டூ விவசாயி


நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கடந்த 20ம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது. ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும் படிக்க..



  • பாஜக கூட்டணியில் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - டிடிவி தினகரன் தேனியில் போட்டி, திருச்சியில்?


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள, அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், திருச்சி தொகுதியில் செந்தில்நாதனும், தேனி தொகுதியில் டிடிவி தினகரனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க..



  • மணவாளன் வழியில் மகுடம் சூட்டிய மங்கைகள்! - அரசியல் களத்தில் அட்ராசிட்டி செய்த அரசிகளின் லிஸ்ட்!


இந்திய அரசியல் களத்தில் கவனம் ஈர்த்த முக்கிய தலைவர்களின் மனைவிகள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. பெண்களின் வளர்ச்சி, சமத்துவம் என்பன போன்ற வாசகங்கள், தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அரசியலில் ஆண்களின் ஆதிக்கம் தான் இன்றளவும் மேலோங்கி உள்ளது. அதேநேரம், கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசியலில், பல முக்கிய தலைவர்களின் மனைவிகள் களமிறங்குவது தொடர்கதையாக உள்ளது. அப்படி களமிறங்கியவர்களில் பலர் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் சோனியா காந்தி உள்ளிட்ட பலரை குறிப்பிடலாம். அந்த வகையில் இந்திய அரசியலில் கவனம் ஈர்த்த, முக்கிய அரசியல் தலைவர்களின்  மனைவிகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் படிக்க..



  • பா.ஜ.க. கூட்டணிக்கு ஆப்பு வைத்த தமிழன்! தனித்து களமிறங்கும் நவீன் பட்நாயக் - ஒடிசா அரசியலில் ட்விஸ்ட்!


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று, இந்த முறையும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்க உள்ள தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் சுழன்று, சுழன்று வேலை செய்து வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில், கூட்டணியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் படிக்க..



  • பிரதமர் மோடியின் சொந்த தொகுதி.. பேக் அடித்த பா.ஜ.க. வேட்பாளர் - குஜராத்தில் பரபர!


அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது என்பதை நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் தீர்மானிக்க உள்ளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 26 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகிறது. மேலும் படிக்க..