தமிழ்நாடு:



  • மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு

  • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது - முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம் 

  • எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை செங்கலை கொடுக்க மாட்டேன் - தேர்தல் பரப்புரையில் உதயநிதி கலகல பேச்சு 

  • தேனி, திருச்சி தொகுதியில் போட்டியில் அமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு 

  • தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் 

  • மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமாகா சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு

  • மக்களவை தேர்தலுக்கான நெல்லை தொகுதி வேட்பாளர் மாற்றம் - சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி அறிவிப்பு 

  • தென்காசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து - 24 அறைகள் இடிந்த நிலையில் பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு 

  • இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதால் நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 27 வரை ரத்து 

  • சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்ட சேலையூர் சிறப்பு காவல் ஆய்வாளர் - தமிழக காவல்துறை அதிர்ச்சி 

  • மக்களவை தேர்தலுக்கான பணிக்குழு பொறுப்பாளர்களை வெளியிட்டது அதிமுக 

  • தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி 


இந்தியா: 



  • மக்களவை தேர்தலுக்கான 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் 

  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் 

  • முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலுக்கு எதிராக மனு - அவசரமாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு 

  • சிறையில் இருந்தாலும் மக்கள் சேவை தொடரும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு 

  • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை என பாஜக விளக்கம் 

  • மறு அறிவிப்பு வரும் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு

  • மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதாவின் காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

  • இமாச்சலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பாஜகவில் இணைந்தனர்

  • ரஷியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

  • மக்களவை தேர்தலில் இருந்து குஜராத்தைச் சேர்ந்த 2 வேட்பாளர்கள் விலகலால் தொண்டர்கள் அதிர்ச்சி 


உலகம்: 



  • ரஷ்யாவில் ஐ.எஸ். ஆயுத குழுவினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 133 ஆக உயர்வு 

  • ரஷ்யாவில் ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் - மொத்தம் 11 பேர் கைது 

  • ரஷ்யாவில் ஆயுதக்குழுவினரின் தாக்குதல் நடக்கலாம் என முன்பே எச்சரித்த அமெரிக்கா

  • பூட்டான் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள மருத்துவமனையை திறந்து வைத்தார் 


விளையாட்டு: 



  • ஐபிஎல் 2024: டெல்லி அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

  • ஐபிஎல் 2024: கொல்கத்தா அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

  • ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் - லக்னோ, மும்பை - குஜராத் அணிகள் மோதல்