- நாம் தமிழர் கட்சிக்கு சின்னத்தை ஒதுக்கியதா தேர்தல் ஆணையம்..? என்ன சின்னம் தெரியுமா..?
நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் விரைவில் பிரச்சாரத்தை தொடங்குகின்றன. அனைத்து கட்சிகளும் சரியான முறையில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா என்று தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய தொடங்கியுள்ளது. மேலும் படிக்க..
- திருச்சி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்.. இன்று முதல் அனல் பறக்கும் பரப்புரை தொடக்கம்!
மக்களவை தேர்தலுக்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று தொடங்குகிறது. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. மேலும் படிக்க..
- அரவிந்த் கெஜ்ரிவால் கைது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மார்ச் 21 ஆம் தேதி மாலை முதல் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதையடுத்து இரவு சுமார் 9.30 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் படிக்க..
- திமுக கூட்டணியில் வேட்பாளர் திடீர் மாற்றம்.. அந்த வீடியோதான் காரணமா?
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்ட தேர்தலான ஏப்ரல் 19 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறை தொடங்கியது. மார்ச் 27 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- நாட்டை அதிரவிட்ட ஆபரேஷன் கருடா! பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் - ஆந்திராவில் பரபரப்பு!
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான போதைப்பொருள்கள், குஜராத் வழியாகவும் பஞ்சாப் வழியாகவும்தான் இந்தியாவுக்குள் எடுத்து வரப்படுகிறது. எனவே, எல்லைப்பகுதிகள் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் படிக்க..