- பிரதமர் மோடி கோவையில் இன்று ரோட் ஷோ.. பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் குவிப்பு..
பிரதமர் மோடியின் ரோட் ஷோவ ஒட்டி, கோவையில் இன்று 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நாடாளுமன்ற மக்களவ தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை முழுவேகத்தில் முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே 5முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி கோவையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அப்போது, ரோட் ஷோ எனப்படும் வாகன பேரணியில் பிரதமர் மோடிஈடுபட உள்ளார். மேலும் படிக்க..
- அருணாச்சல், சிக்கிம் மாநிலங்களுக்கு முன்னதாகவே வெளியாகும் தேர்தல் முடிவு; புது அறிவிப்பு எதனால்?
அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையானது முன்பே ( ஜூன் 2 ) நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவற்றுக்கு மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கும் என்றும் இறுதி கட்டமான 7 ஆம் கட்டம் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..
- பாஜகவை வாட்சப் எப்படி அனுமதித்தது; காங்கிரஸ் கேள்வி? உங்களுக்கு மெசேஜ் வந்ததா?
பலரது வாட்சப் எண்ணிற்கு, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திடம் இருந்து மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திக்கு காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்தது. 'விக்சித் பாரத் சம்பார்க்' என்ற பெயரில் பலருக்கும் வாட்சப் வழியாக மெசேஜ் வந்தது. இந்த செய்தியானது, புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த வாட்ஸ்அப் செய்தியில், அரசாங்க திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து குடிமக்களிடமிருந்து கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கேட்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் படிக்க..
- மக்களை பிளவுபடுத்தும் பாஜகவை அகற்ற வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
மக்களை பிளவுபடுத்தும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என மும்பையில் நடைபெறும் இந்தியா அணி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான பயணத்தின் நிறைவு விழா மும்பையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் படிக்க..