- ”ராமர் அலை” என எதுவும் இல்லை.. அது அரசியல் நிகழ்வு.. ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக கண்டனம்
இந்தியாவில் ”ராமர் அலை” என எதுவும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையாகியுள்ளது. ராகுல் காந்தியின் நியாய யாத்திரை அசாமில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவால் ஏற்பட்டுள்ள அலையை எப்படி எதிர்கொள்வது என திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தபோது, ”இங்கு அலை இருக்கிறது என்பது போன்று எதுவுமில்லை. பாஜகவின் அரசியல் திட்டமும், நரேந்திர மோடியின் நிகழ்ச்சியும் அங்கு அரங்கேறியுள்ளது. மேலும் படிக்க.,
- அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. முதல் நாளில் இத்தனை லட்சம் பேர் தரிசனமா?
அயோத்தியில் ராமர் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் எத்தனை லட்சம் பேர் தரிசனம் மேற்கொண்டார்கள் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நாகரா பாணி கட்டிடக்கலையை மையப்பட்டுத்தி கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோயிலில் கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க.,
- 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்.. இடிக்கப்படும் இரண்டு முக்கிய மேம்பாலங்கள்..
மெட்ரோ பணிக்காக சென்னையில் 2 முக்கிய மேம்பாலங்களான அடையாறு, அஜந்தா பாலங்கள் இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ராயப்பேட்டை அஜந்தா பாலத்தை இடிக்கக் கூடிய பணிகள் துவக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் இடிப்பு பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் முதல் ராயப்பேட்டையை இணைக்க கூடிய அஜந்தா மேம்பாலம் இடிக்கப்படுவதால் அவ்வை சண்முகம் சாலை வழியாக பேருந்துகள் மற்றும் வாகனங்கள் திருப்பிவிடப்படுகின்றன. மேலும் படிக்க.,
- பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி - விடுதி உணவுக்கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு
அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளில் உணவுக் கட்டணத்தை, 400 ரூபாய் வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பிற்படுத்தப் பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர். சீர் மரபினர், மற்றும் சிறுபான்மையினருக்கான விடுதிகள் செயல்படுகின்றன. அங்கு தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான மாத கட்டணத்தை உயர்த்துவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவும் இதுவரை வசூலித்து வந்த தொகையிலிருந்து 400 ரூபாய் கூடுதலாக இனி வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க.,
- மதுரையில் இன்று திறக்கப்படுகிறது உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கம் - உள்ளே இருக்கும் வசதிகள் என்ன?
மதுரை கீழக்கரையில் அமைந்துள்ள உலகின் முதல் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கில், வீரர்கள், காளைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரூபாய் 62.78 கோடி செலவில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதனை திறந்து வைக்கிறார். இதையொட்டி, அரங்கில் உள்ள வசதிகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க.,