• மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்யப்போகும் 64%? டைம்ஸ் நவ் நடத்திய கணக்கெடுப்பு..


நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. நாடே எதிர்ப்பார்க்கு தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் தரப்பில் விரைவில் அறிவிக்கப்படும். தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தரப்பிலும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இம்முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு யுக்திகளை பாஜக கையில் எடுத்துள்ளது. அதேபோல், 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருப்பதால் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. யார் பிரதமர் வேடாளராக அறிவிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க..



  • திமுகவை விஜய் ஒழித்தால் அது மிகப்பெரிய தொண்டு - பழ.கருப்பையா ஆவேசம்!


விஜய்யின் அரசியல் வருகையை தான் வரவேற்பதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவருமான பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இன்னும் 2 படங்கள் நடித்து விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவளிக்கவோ போவதில்லை என விஜய் தெரிவித்துள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க..



  • வருகின்ற 25-ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடி ; பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப விழா ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருப்பூரில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 180 சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நடைபயணத்தின் பிரமாண்டமான நிறைவு விழா பொதுக்கூட்டம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் படிக்க..



  • சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே? - டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சம்மன்!


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு இன்று திடீரென குற்றப்பிரிவு போலீசார் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமலாக்கத்துறை சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருக்கும் நிலையில் தற்போது குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் விடுத்து உள்ளனர். கடந்த வாரம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது தனது கட்சி எம் எல் ஏக்கள் 7 பேரிடம் பாஜக பேரம் பேசியதாகவும் 25 கோடி வரை தர தயாராக இருப்பதாகவும் பாஜக கூறியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க சதி நடப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் படிக்க..