• 10 ஆண்டுகளில் இரட்டிப்பான மாதாந்திர குடும்ப செலவு, தனிநபருக்கு இவ்வளவா? - ஆய்வில் தகவல்


இந்தியாவில் மாதாந்திர குடும்ப செலவு இரண்டு மடங்கு அதிகரித்து இருப்பது, தேசிய புள்ளியல் அலுவலகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த  11 ஆண்டுகளில் முதல் முறையாக ஆகஸ்ட் 2022 மற்றும் ஜூலை 2023 க்கு இடையிலான காலகட்டத்தில்,  மேற்கொள்ளப்பட்ட அகில இந்திய குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  முக்கியமான பொருளாதார குறியீடுகளான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), வறுமை நிலைகள் மற்றும் நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI) ஆகியவற்றை மதிப்பாய்வு செய்வதில் இந்த தரவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குடும்ப நுகர்வுச் செலவுக் கணக்கெடுப்பு வழக்கமாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.  மேலும் படிக்க..



  • இன்று திறக்கப்படுகிறது கருணாநிதி நினைவிடம் - மிரட்டும் தொழில்நுட்ப வசதிகள், மொத்த லிஸ்ட் இதோ..!


சென்னை மெரினா கடற்கரையில் புனரமைக்கப்பட்டுள்ள,  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் இன்று திறக்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வயது முதிர்வு காரணமாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி காலமானார். இதையடுத்து திமுக முன்னாள் தலைவரும், 5 முறை தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். மேலும் படிக்க..



  • ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் கைகோர்த்த அகிலேஷ் யாதவ் - உ.பி-யை அதிரவிட்ட யாத்திரை!


இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து உத்தர பிரதேசத்தை அடைந்துள்ளது. அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்கும் நோக்கில் ராகுல் காந்தி யாத்திரைக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மேலும் படிக்க..



  • அயோத்தி ராமருக்கு உண்டியல் காணிக்கை இவ்வளவா! ஒரு மாதத்திலேயே இத்தனை கோடியா?


அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காணிக்கையாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் 5 வயது குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று  வந்தாலும், குழந்தை ராமர் கோவில் சிலை அமைந்துள்ள பகுதி மட்டும் அனைத்தும் வேலைகளும் முடிந்து, பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது. மேலும் படிக்க..