•  பரந்தூர் விமான நிலையம் - நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு.. 


பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான, முதல்நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.04.05 ஹெக்டேர் மற்றும் 2.77..76 ஹெக்டேர்  நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிலம் குறித்து பாத்தியத்தை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தனி மாவட்ட வருவாய் அலுவலர் , புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், பரந்தூர், காஞ்சிபுரம் என்ற எழுத்து முகவரியில் எழுத்து மூலமாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் படிக்க..



  • பயனர்களின் ப்ரொபைல் போட்டோவை பாதுகாக்க புதிய வசதி! வாட்ஸ் அப்பில் வரப்போகும் சூப்பர் அப்டேட்!


வாட்ஸ் அப்பில் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மெட்டா நிறுவனம் ஒரு வசதியை கொண்டு வரவுள்ளது. தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் படிக்க..



  • அசாமில் இஸ்லாமிய திருமணங்கள், விவாகரத்து பதிவு சட்டம் ரத்து - அடுத்து பொது சிவில் சட்டம்தான்!


அசாம் மாநிலத்தில் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான, 89 ஆண்டுகால சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. அசாம் மாநிலத்தில் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு செய்வது தொடர்பான,  89 ஆண்டுகால சட்டத்தை ரத்து செய்ய மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மாநில சுற்றுலா அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா, “அசாமில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த பயணத்தின் மிக முக்கிய முடிவாக அசாம் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம், 1935 ஐ ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க..



  • காங்கிரசுக்கு சீட் இல்லை! மே. வங்கத்தில் 42 தொகுதிகளிலும் போட்டி - திரிணாமுல் காங்கிரஸ் அதிரடி


மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலில் 42 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் இணைந்து, I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கின. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாதி என பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், இந்த கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு என்பது உறுதியாகவில்லை. அதேநேரம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் ஏற்கனவே கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளன. இதற்கு முக்கிய காரணமாக இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்து பேசி முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. மேலும் படிக்க..