- சென்னை மாநகராட்சி பட்ஜெட்.. இன்று தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா ராஜன்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பொது பட்ஜெட்டும், நேற்று விவசாய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 22) இந்த இரண்டு பட்ஜெட் குறித்த விவாதங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும். இப்படியான சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா ராஜன். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதனைதொடர்ந்து, நாளை (பிப்ரவரி 22) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. மேலும், 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கிறது. மேலும் படிக்க..
- மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக எல்.முருகன் தேர்வு..!
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல்.முருகன் உட்பட ஐந்து வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் 4 வேட்பாளர்களும், காங்கிரஸிலிருந்து ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் படிக்க..
- ”பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சண்டிகர் தேர்தல் அதிகாரி குற்றவாளி”- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி குற்றவாளி என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி மாதம் 30ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட, குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது. இருப்பினும், ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனால், மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..
- முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார் சோனியா காந்தி
மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ், தி.மு.க. உள்பட நாடு முழுவதும் பா.ஜ.க.வை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி உருவானது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்த முறையும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் போதுமான அளவு எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அங்கிருந்து 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் காங்கிரஸ் சார்பில் தேர்வாக உள்ளனர். மேலும் படிக்க..