தமிழ்நாடு:
- 2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்; விவசாயிகளுக்கு ரூ.16,500 கோடி பயிர்க்கடன் - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு
- சாலைகளில் ஆணியை புதைக்கிறது பாஜக அரசு, உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு - வேளாண் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
- கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகள் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ பேசியதற்கு திரைத்துறையை சார்ந்தோர் கண்டனம்
- பாடலாசிரியர் சினேகன் புகாரைத் தொடர்ந்து பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி கைது: வீட்டில் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த காவல்துறை
- ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைதான இயக்குநரின் ஜாமீன் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
- அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவின் பேச்சுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
- தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
- சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் தங்க நகைகள் மார்ச் 7ல் தமிழ்நாடு திரும்புகிறது - பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
- ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து சோனியா காந்தி, எல்.முருகன் மாநிலங்களவை எம்பியாக தேர்வு; குஜராத்தில் ஜெ.பி.நட்டா
- காஷ்மீரில் ரூ.32,000 கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல்.முருகன் உட்பட ஐந்து வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
- டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
- வரும் 2025-26 கல்வியாண்டு முதல், ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
- நிரந்தர பணி ஆணையத்தை பெண் அதிகாரிகளுக்கு விரிவுபடுத்தும் விவகாரத்தில் ஆணாதிக்கத்துடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உலகம்:
- பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடிவாகி உள்ளது.
- லிபியாவில் இருந்து ஐரோப்பா சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு.
- ரஷ்யாவை சமாளிக்க நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் தேவை - உக்ரைக் பிரதமர்.
- இந்தியா - ரஷ்யா இடையே எப்போதும் நிலையான நட்புறவு இருந்துள்ளது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
- வடகொரியா அதிபருக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு காரை அதிபர் புதின் பரிசளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு:
- விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.
- கிரிக்கெட் ஜாம்பவான் மஹேந்திர சிங் தோனி ஐ.பி.எல் தொடரில் இணைந்து நேற்றோடு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
- காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்திய பிரீமியர் லீக்கின் 17வது சீசன் வருகின்ற மார்ச் 22ம் தேதி முதல் தொடங்கும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.