Bihar Trust Vote : பரபரப்பு! நிதிஷ்குமார் அரசு நீடிக்குமா? கவிழுமா? பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று பீகார் ஆகும். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 28ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாக முதலமைச்சர் பதவியேற்றார். மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நிதிஷ்குமாரின் நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் படிக்க..
செயற்கை கோள் விண்ணில் ஏவுவதை நேரில் பார்க்க வேண்டுமா? முன்பதிவு செய்வது எப்படி?
விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. சூரியன், செவ்வாய், நிலவு என விண்வெளியில் பலவற்றையும் ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா ஆதித்யா, ககன்யான், சந்திரயான் என பல செயற்கை கோள்களையும் ஏவி வருகிறது.
இந்த செயற்கை கோள்களானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவப்பட்டு வருகிறது. அங்குள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. உள்பட ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகிறது. மேலும் படிக்க..
காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை - கத்தார் நீதிமன்றம்
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இந்தியாவின் கடற்படையில் பணியாற்றிய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர்.
இந்த நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி, அதுதொடர்பான சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரும் கத்தாரின் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை சேர்த்ததாகவும், அதை அவர்கள் இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் படிக்க..
J.P. Nadda: பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு - சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு
தமிழ்நாட்டிற்கு வந்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பாஜக தலைவர்கள் அனைவரது மனதில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசுகின்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாஜக அரசு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. திமுகவின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்து வருகின்றது என பேசினார். மேலும் படிக்க..
கோவை குண்டுவெடிப்புக்கும் கொழும்பு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு என்ன? தொடரும் ரெய்டு.. என்ஐஏ பகீர்!
கடந்த 2022ஆம் ஆண்டு, கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மனித வெடிகுண்டு ஜமீஷா முபீன் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டும் இன்றி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் படிக்க..