தமிழ்நாடு:



  • ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது; 19ம் தேதி பட்ஜெட் தாக்கல்

  • ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை மக்கள் வசதிப்படி சென்று பதிவு செய்துகொள்ளலாம்: தமிழ்நாடு அரசு விளக்கம்

  • கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய பஸ்கள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி - அமைச்சர் சிவசங்கர் தகவல்

  • நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது; மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு மாடல் அரசு - அமைச்சர் உதயநிதி பேச்சு

  • நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழப்பு - காவல்துறையினர் விசாரணை

  • திமுக, விசிக தொகுதி பங்கீடு - அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனை

  • கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு ; மேலும் 4 பேர் கைது

  • மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் இந்தியாவை வழிநடத்துகிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

  • 12ஆம் வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று (பிப்.12) முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்குகிறது.


இந்தியா: 



  • பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு - சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு

  • கோவை அரபிக் கல்லூரியில் அரபு மொழி சொல்லி தருவதாகக் கூறி இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் ஆட்சேர்க்கும் முயற்சி நடந்ததுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

  • நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டணை வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

  • இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ தொழில்நுட்ப சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். 

  • பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 3,137 தமிழக மீனவர்கள் கைது - மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

  • இந்தியாவில் டி.என்.ஏவில் இருக்கிறது அன்பு - ராகுல் காந்தி பேச்சு

  • டெல்லியில் விவசாயிகள் நாளை முற்றுகை; ஹரியானா எல்லைக்கு சீல் வைப்பு - 5,000 காவல்துறையினர் குவிப்பு

  • பொது நலன் மற்றும் நிர்வாகத்தில் அயோத்தி ராமர் கோயில் புது சகாப்தத்தை கொண்டு வந்துள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


உலகம்:



  • ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவுவதை நேரில் பார்க்க முன்பதிவு தொடக்கம் - இஸ்ரோ அறிவிப்பு.

  • சோமாலியா: கூட்டுப்போர் பயிற்சியின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.

  • பொதுமக்கள் ஆதரவுக்கு நன்றி - புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அறிக்கை.

  • காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - பாலஸ்தீனர்கள் 31 பேர் உயிரிழப்பு. 

  • பாலியல் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதால் ஹங்கேரி அதிபர் கத்தலின் நோவாக் பதவி விலகியுள்ளார். 


விளையாட்டு: 



  • சென்னை ஓபன் டென்னிஸில் இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன்.

  • ப்ரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்டன்ஸ் அணி அபார வெற்றி.

  • 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி.  

  • வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சதம்; ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்து மேக்ஸ்வெல்

  • ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பிசிசிஐ தேர்வுக்குழு மதிப்பதில்லை என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.