• செம்ம! கோவை டூ பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்...தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி - கட்டணம் எவ்வளவு?


டிசம்பர் 30ஆம்  தேதி கோயம்புத்தூர் - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.  இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதிகாலை 5.00  மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில், காலை 11.30 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடைகிறது.  இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. மேலும் படிக்க



  •  உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணம் - தொண்டர்கள் சோகம் 


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். தேமுதிக தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத அவர் ஆண்டுக்கு 2, 3 முறை மட்டும் தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வந்தார். மேலும் படிக்க



  • வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு மின்சார வாரியம் அட்வைஸ்..


தென் மாவட்டங்களை புரட்டி போட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின்சார பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.  வீட்டில் மின் சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும் போது பாதுகாப்புக்காக காலில் செருப்பு அணிந்து கொள்ளவும்.நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த தனியார் பேருந்து - 13 பேர் உயிரிழப்பு


மத்தியப்பிரதேச மாநிலத்தில் நேற்று இரவு இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. அங்குள்ள குணா - அரோன்  நெடுஞ்சாலை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தானது எதிரே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.  இதில் பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த விபத்தில் 13 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் படிக்க



  • இறுதிவரை போராடிய தமிழ் தலைவாஸ்... வெற்றி வாகை சூடிய குஜராத் ஜெயன்ட்ஸ்!


10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 30-33 என்ற கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11 புள்ளிகளுடன் 11வது இடத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது. மேலும் படிக்க