தமிழ்நாடு: 



  • சமூக நீதி, சமத்துவம், சமதர்மம் உள்ளிட்ட மானுட நெறிகளின்படி தமிழ்நாட்டை உருவாக்க உழைக்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • தேமுதிக நிறுவனர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு - வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை

  • சிபிசிஎல் எண்ணெய் கழிவு பாதிப்பிலிருந்து மீளாத நிலையில் எண்ணூர் உர ஆலையில் அமோனியா கசிவு; கடும் மூச்சு திணறலால் 50க்கும் மேற்பட்டோர் மயக்கம் - தொழிற்சாலையை மூட உத்தரவு

  • காஞ்சிபுரத்தில் ரவுடி கொலை தொடர்பாக பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிய 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை - காஞ்சிபுரத்தில் பரபரப்பு

  • வழக்குகளில் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு ஜே.என்.1 கொரோனா பாதிப்பு - ஆய்வில் உறுதியானது

  • மாணவர்கள் M.Phil படிப்புகளில் சேர வேண்டாம் - பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தல்

  • திமுக ஆட்சியில் மக்கள் அச்சத்துடனும், ரவுடிகள் தைரியமாகவும் உள்ளனர்- வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

  • டிசம்பர் 30ஆம்  தேதி கோயம்புத்தூர் - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
      

  • எடப்பாடி பழனிசாமியின் அதிகார போதையால்தான் அதிமுக தோற்றது - ஓபிஎஸ் சரமாரி தாக்கு

  • தென் மாவட்டங்களில் வருகின்ற 31ம் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு


இந்தியா: 



  • மத்தியப் பிரதேசத்தில் பயணிகள் பேருந்து தீப்பிடித்து விபத்து - 13 பேர் உயிரிழப்பு.

  • இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 87 பேருக்கு கொரோனா பாதிப்பு.

  • இந்தியாவில் மீண்டும் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று - நேற்று ஒரே நாளில் 529 பேருக்கு பாதிப்பு உறுதி.

  • ஹரியானாவில் பஜ்ரங் புனியாவுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி - புகைப்படம் இணையத்தில் வைரல்.

  • 2024 நாடாளுமன்ற தேர்தல் : தமிழக அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை.

  • மசரத் ஆலமின் ஜம்மு காஷ்மீர் முஸ்லீம் லீக் அமைப்பை தடை செய்தது மத்திய அரசு 

  • ராகுல் காந்தி வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி மணிப்பூரில் இருந்து மும்பை வரை அதாவது 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் யாத்திரை மேற்கொள்ளவுள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 


உலகம்: 



  • இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது - ரஷ்ய அதிபர் புதின்.

  • இந்தியாவின் ராணுவ சுய சார்பு உற்பத்திக்கு முழு ஆதரவு - ரஷ்யா தகவல்.

  • நைஜீரியாவில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழப்பு - 70 பேர் காயம்.

  • ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு


விளையாட்டு:



  • தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

  • தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் - சதம் அடித்து கே.எல்.ராகுல் அசத்தல்

  • இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் 2வது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. 

  • ஐபிஎல் டி20 கிரிக்கெட் போன்று ஐ.எஸ்.பி.எல். டி10 கிரிக்கெட் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதில் சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.