• இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - பாஜக Vs காங்கிரஸ், கேரளா - மகாராஷ்டிரா - தேர்தல் சூழல்


நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவையொட்டி, முக்கிய மாநிலங்களில் நிலவும் தேர்தல் சூழல் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில்,  முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து இன்று  அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், மேலும் படிக்க..



  • நாடாளுமன்ற தேர்தல் - 2ம் கட்டமாக இன்று 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு - எந்த மாநிலங்களில் யார் போட்டி?


 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக உள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில்,  முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின. மேலும் படிக்க..



  • ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!


ஐஸ்கிரீம், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருள்களில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன்படி திரவ நைட்ரஜன் ஒரு செயலாக்க உதவியாக உறைதல் தன்மையுள்ள பொருட்களான பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களில் உறைதல் பணியினை மேற்கொள்ள மட்டுமே உதவுகிறது. மேலும் படிக்க..



  • கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?


தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, வெப்பநிலை அதிகரிக்கும், வெப்ப அலை வீசும் என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அவையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் படிக்க..