தமிழ்நாடு:



  •  விடுமுறை மற்றும் முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

  • பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை கலந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

  • அதிகரிக்கும் கோடை வெப்பத்தை விவேகமான செயல்களால் வெல்வோம் - பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் 

  • கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேச்சுவார்த்தை - பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு 

  • பேருந்துகளை முறையாக பராமரித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

  • புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதால் பரபரப்பு - போலீசார் விசாரணை

  • 35வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - வழக்கில் விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு ஏப்ரல் 30ல் விசாரணை

  • ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு மே 6 ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  • உடல் பருமன் சிகிச்சைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த பரிதாபம் - விசாரணை குழு அமைக்கப்பட்டதாக என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

  • மணல் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான 5 மாவட்ட ஆட்சியர்கள் 


இந்தியா: 



  • இரண்டாவது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது 

  • இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள் வெப்ப அலை வீச வாய்ப்பு - வாக்கு சதவிகிதம் பாதிக்குமா என அரசியல் கட்சிகள் அச்சம் 

  • மக்களவை தேர்தலின் வெற்றி பிரதமர் மோடியின் கைகளில் இருந்து நழுவி விட்டதாக ராகுல் காந்தி விமர்சனம்

  • தொடர்ந்து பொய்களை பேசி உண்மையான பிரச்சினைகளை பிரதமர் மோடி திசை திருப்புவதாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

  • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இரவு 11 மணி வரை மதுக்கடைகளை திறந்து வைக்க கலால் துறை அனுமதி

  • பதவி நாற்காலியை பிடிக்க காங்கிரஸ் கட்சி போராடுவதாக பிரதமர் மோடி விமர்சனம் 

  • தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் - பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவு 

  • தெலங்கானாவில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு 

  • கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு 


உலகம்: 



  • ஆப்பிரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 223 பேரை சுட்டுக்கொன்றது ராணுவம் 

  • உக்ரைனில் ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் வெளிநாடு செல்ல தடை 

  • கென்யாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 32 பேர் உயிரிழப்பு 

  • நைஜீரியாவில் கனமழையால் சிறைக்குள் புகுந்த வெள்ளம் - 119 கைதிகள் தப்பியோட்டம் 

  • பிலிப்பைன்ஸில் பல்வேறு மாகாணங்களில் கடும் வெயில் - 6 பேர் உயிரிழப்பு


விளையாட்டு: 



  • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி செய்வதாக செஸ் சம்மேளனம் தகவல்

  • ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் இன்று மோதல் 

  • ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி 

  • பாகிஸ்தான் அணிக்கெதிரான 4வது டி20 போட்டி - 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி