• கடந்த 4 மக்களவைத் தேர்தல்கள்! எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? ஓர் அலசல்..


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த 4 மக்களவைத் தேர்தலில் எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை கீழே காணலாம். மேலும் படிக்க..



  • இவிஎம் இயந்திரங்களை ஏற்றி சென்ற வாகனம்.. அஸ்ஸாமில் ஆற்றில் மூழ்கியதால் பரபரப்பு!


உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், அஸ்ஸாம் மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இந்த நிலையில், லக்கிம்பூர் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றி சென்ற வாகனம் ஆற்றில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க..



  • வாக்குச்சாவடியில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள்.. மணிப்பூரில் தொடர் பதற்றம்!


இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், இன்னர் மணிப்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. மொய்ராங் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பி வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். காலை 9 மணி அளவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் ஆனால் யாரும் இதில் காயம் அடையவில்லை எனக் கூறப்படுகிறது. நிலைமையை காவல்துறை அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் வாக்காளர்கள் தொடர்ந்து வாக்களித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க..



  • மணிப்பூரில் நூதன தேர்தல் - 2 தொகுதிகளுக்கு இப்படியெல்லாமா வாக்குப்பதிவு நடைபெறும்..!


ஒராண்டாக தொடரும் கலவரத்தை தொடர்ந்து மணிப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த ஓராண்டிற்கும் மேலாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் படிக்க..