• இன்று நெல்லையில் ராகுல்காந்தி, மதுரையில் அமித்ஷா - தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்


நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாதக ஆகிய 4 முனை போட்டி நடைபெறுகிறது. பாஜக இம்முறை தமிழ்நாட்டில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக  தேசிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படிக்க..



  • பௌத்தத்திற்கு மாற அரசின் அனுமதி தேவை.. மத சுதந்திரத்தில் தலையிடுகிறதா பாஜக அரசு?


தலித், பழங்குடியின மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. இதனால், பிற மதங்களுக்கு மதமாறுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரான அம்பேத்கர் வழியில், இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்தத்திற்கு மதம் மாறுவது அதிகரித்து வருகிறது. குஜராத்தில், ஒவ்வொரு ஆண்டும், தசரா மற்றும் பிற பண்டிகைகளின்போது, தலித்களில் பெரும்பகுதியினர் பெரும் எண்ணிக்கையில் புத்த மதத்திற்கு மாறி வருகின்றனர். மேலும் படிக்க..



  • இன்று கோலாகலமாக தொடங்குகிறது மதுரை சித்திரை திருவிழா..! ஏப்.21 மீனாட்சி திருக்கல்யாணம்


மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் அங்கமாக, ஏப்ரல் 21ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கள்ளழகர் ஆற்றில் இறங்குவது, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் போன்ற நிகழ்வுகளை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அண்டை மாவட்டங்களில் இருந்தும் குவிவார்கள். இதனால் தூங்காநகரம் என்பன போன்ற பல பட்டப்பெயர்களை கொண்ட மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். மேலும் படிக்க..



  • இந்தியாவுக்கு நகரும் ஆப்பிள் நிறுவனம்; 5 லட்சம் வேலைவாய்ப்புகள் வரலாம் என கணிப்பு


ஆப்பிள் நிறுவனம், இந்திய பணியாளர்களை 3 ஆண்டுகளில் 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில், இந்திய தொழிலாளர்களை அதிகரிக்கும் வகையில், சீனாவில் இருந்து விநியோகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளது. சீனாவை தளமாகக் கொண்ட விநியோகச் சங்கிலியில் இருந்து பாதி அளவை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.  மேலும் படிக்க..



  • பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கும் திருநங்கை துறவி.. ஸ்கெட்ச் போட்ட இந்து மகாசபா!


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19-ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை (80) கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரண்டு தேர்தல்களை போல் இந்த முறையும் அதிகப்படியான இடங்களில் வெல்ல பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க..