• 375 ஆண்டுகளாக மாயமான 8வது கண்டம்.. மர்மத்தை உடைத்த விஞ்ஞானிகள்: வெளியான ஆச்சரிய தகவல்..


உலகில் எத்தனை கண்டங்கள் இருக்கிறது என கேட்டால், 7 என்று தான் பெரும்பானவர்கள் பதில் அளிப்பார்கள். ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவை தவிர்த்து 8ஆவது கண்டம் ஒன்று இருக்கிறது என சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், இருக்கிறது என்பதே விஞ்ஞான உலகின் பதில். மேலும் படிக்க..



  • மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்..


மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களைவில் அறிமுகப்படுத்தி பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவையிலும், ஒருமனதாக மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதவுக்கு குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இது அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனால் இந்த மசோதா தற்போது சட்டம் ஆகியுள்ளது. மேலும் படிக்க..



  • பஞ்சாபை பதற வைக்கும் விவசாயிகள் போராட்டம்.. ரயில் மறியல் காரணமாக இயல்பு வாழ்க்கை முடக்கம்..


பஞ்சாபில் முக்கிய தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது. மொத்தம் மக்கள் தொகையில் 39 சதவிகிதத்தினர் அங்கு விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் பொருளாதாரத்தில் வேளாண்துறையே பெரும் பங்காற்றி வருகிறது. மேலும் படிக்க..



  • தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஒவ்வொரு இந்தியரின் பங்களிப்பும் முக்கியம் – பிரதமர் மோடி அழைப்பு..


நாடு முழுவதும் உள்ள மக்களை அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும் தூய்மை இயக்கத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வச் பாரத் என்பது பகிரப்பட்ட பொறுப்பு என்றும்,  இதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் மதிப்புமிக்கது என்றும் கூறினார். அதாவது இது தொடர்பாக டிவிட்டர் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,  "அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு, நாங்கள் ஒரு முக்கிய தூய்மை முயற்சிக்காக ஒன்று கூடுகிறோம். ஸ்வச் பாரத் என்பது பகிரப்பட்ட பொறுப்பு, மேலும் ஒவ்வொரு முயற்சியும் மதிப்புள்ளது. தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் சேருங்கள்" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க..



  • உங்களிடம் 2000 ரூபாய் நோட் உள்ளதா? உடனே மாதுங்க.. இன்று தான் கடைசி நாள்..


2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு 2016  ஆம் ஆண்டு நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த அந்த அறிவிப்புக்கு பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளையும், 1000 ரூபாய்க்கு பதிலாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. மேலும் படிக்க..



  • ஒரே நேரத்தில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. புயலாக மாறுமா? வானிலை சொல்லும் தகவல்..


வட கடலோர கர்நாடகா மற்றும் அண்டை பகுதிகளில் சூறாவளி சுழற்சியின் காரணமாக, தெற்கு கொங்கன்-கோவா கடற்கரை ஒட்டி கிழக்கு மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்புடைய சூறாவளி சுழற்சி சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிமீ வரை உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில்  படிப்படியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க..