• தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக் கூடாது – பெங்களூரில் இன்று முழு அடைப்பு போராட்டம்..


தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வெறும் தண்ணீர் பிரச்சனை இல்லை. அரசியல் பிரச்சனை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேசிய அளவில் காங்கிரஸுடன் கைகோர்த்தும் மாநில அளவில் கர்நாடக காங்கிரஸுடன் மோதல் போக்கையும் கடைபிடிக்க வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல. மேலும் படிக்க..



  • ஆதார் அடையாள அட்டை நம்பகத் தன்மையற்றதா? மூடிஸ் அமைப்பிற்கு மத்திய அரசு பதிலடி..


இந்திய அரசால் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை நம்பகத்தன்மை அற்றது என, பிரபல முதலீட்டாளர் சேவை நிறுவனமான மூடிஸ் எச்சரித்துள்ளது. மூடிஸ் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், ஆதார் உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் அடையாள அட்டை. மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின் கருத்துக்கள் ஆதாரமற்றவை. எந்த ஆதாரமும் அல்லது அடிப்படையும் இல்லாமல், ஆதாருக்கு எதிராக உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் அடையாள அட்டைக்கு எதிராக பெரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.  மேலும் படிக்க..



  • புதுச்சேரி பா.ஜ.க தலைவராக செல்வகணபதி எம்.பி நியமனம்..


புதுச்சேரி பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா அறிவித்துள்ளார். புதுச்சேரியில் தற்போது என். ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ், 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து, என். ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றார். மேலும் படிக்க..



  • அதிரடி சலுகை அறிவித்த ஐ.ஆர்.சி.டி.சி.. விமான டிக்கெட்டிற்கு ரூ.2000 வரை ஆஃபர்.. சேவை கட்டணமும் கிடையாது..


ஐ,ஆர்.சி.டி,சி., இணையதளம் மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 27ம் தேதியன்று உலக சுற்றுலா தினத்துடன், ஐ.ஆர்.சி.டி.சி தோற்றுவிக்கப்பட்டதன்  24வது நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது.  இதனை ஒட்டி வாடிக்கையாளர்களுக்கு தாராளமான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ”மூன்று நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 25 முதல் 27 வரை, IRCTC தனது இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கான சேவைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..



  • வயநாடு இல்லாம ஹைதராபாதில் போட்டியிடுங்க பார்ப்போம்.. ராகுல் காந்திக்கு சவால் விட்ட ஒவைசி..


அகில இந்திய மஜ்லிஸ் இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) ஹைதராபாத்தில் நடந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஹைதராபாத்தில் நின்று போட்டியிட வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, அந்த பேரணியில் காங்கிரஸை கடுமையாக சாடிய ஒவைசி, காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் படிக்க..