வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் இன்று ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த செயலியில் திமுக அரசின் செயல்பாடுகள், ஒவ்வொரு தொகுதியை பற்றிய விரிவான தகவல்கள், அரசின் திட்டங்கள் மற்றும் திராவிட தத்துவம் சார்ந்த தகவல்கள் இந்த செயலியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் இன்று திமுக பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இந்த பவளவிழாவானது ஆனைகட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காடனேரி பைபாஸ் ரோடு அருகே நடைபெறுகிறது. மேலும் படிக்க



  •  'சனாதனம் குறித்து பொதுவெளியில் அமைச்சர் பேசுவது சரியல்ல..' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


சென்னையில் தணிக்கையாளர் சங்கத்தின் 90-வடு ஆண்டு விழா கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.  அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் சனாதனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன். “இந்த 2 நிமிடங்களில் சனாதனம் குறித்து பேச சொல்கிறீர்கள். ஆனால், அரசியல் சாசனத்தின்படி உறுதிமொழி ஏற்று ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளவர், சனாதனம் குறித்து பொதுவெளியில் இப்படி பேசுவது சரியானது அல்ல” என தெரிவித்தார்.மேலும் படிக்க



  • ஆசிய கோப்பை  இறுதிப்போட்டியில் மோதல்.. இந்தியா - இலங்கை இன்று பலப்பரீட்சை.. மழைக்கு வாய்ப்பா?


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. கொழும்பு ஆர்.கே பிரேமதாச ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றது. இன்று  கொழும்பில் சுமார் 80 சதவீத மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இன்றைய நாளில் மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை பலத்த மழை பெய்யக்கூடும், இதனால் ஆட்டத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க




  • ‘மேடையை அலறவிட்ட தமிழ் படங்கள்’ .. சைமா (SIIMA) விருதுகளை அள்ளிய பிரபலங்கள்..!




சைமா திரைப்பட விருதுகள் (SIIMA Awards 2023) வழங்கும் விழாவில் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், த்ரிஷா, யோகிபாபு, கீர்த்தி சுரேஷ், பிரதீப் ரங்கநாதன், அதிதி ஷங்கர், மணி ரத்னம், அனிருத்,மாதவன், காளி வெங்கட், வசந்தி, ரவி வர்மன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் விருது பெற்றனர். தமிழ் மொழியில் அதிக விருதுகளை பொன்னியின் செல்வன் 1, விக்ரம், ஆகிய படங்கள் பெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் பிரபலங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க



  • நாளை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்.. இன்று நடக்கிறது அனைத்து கட்சிகள் கூட்டம்..!


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து விளக்கமளிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது விவாதிக்கப்பட உள்ளது.  கூட்டத் தொடர் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க