வன்முறை பூமியாக மாறிய மணிப்பூர்..! கலவரத்திற்கு காரணம்தான் என்ன?
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடத்தப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை பேரணியில் வன்முறை வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்டீஸ் சமூகத்தினரை சேர்க்க வேண்டும் என்ன நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள நிலையில், மாநில உயர்நீதிமன்றம் மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வன்முறை வெடிக்க 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு - மணீஷ் சிசோடியாவே முக்கிய குற்றவாளி என குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை குற்ற பத்திரிகையில் முக்கிய குற்றவாளி என அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்யும் 5ஆவது குற்றப்பத்திரிகை இதுவாகும். இந்த வழக்கில் பிணை கேட்டு சிசோடியா மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் படிக்க
- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி..!
பீகார் மாநிலத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணி கடந்த ஜனவரி 7ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசால் தொடங்கப்பட்ட முதற்கட்ட கணக்கெடுப்பு ஜனவரி 21ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. சாதி வாரி கணக்கெடுப்பை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
- விடாமல் துரத்தும் லே ஆஃப்.. 3,500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் காக்னிசென்ட்
நடப்பாண்டில் நிறுவனத்தின் வருவாய் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. ஊழியர்கள் பணி நீக்க முடிவால் இந்தியாவை சேர்ந்த எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.முன்னதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய ரவிக்குமார், இந்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
நெருங்கும் நீட் தேர்வு...வெளியானது ஹால் டிக்கெட்...
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு மொத்தமாக 20,87,445 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க