Morning Headlines July 03:
Cabinet Reshuffle: மத்திய அமைச்சரவையில் மாற்றம்? இன்று முக்கிய முடிவு எடுக்கப்போகும் பிரதமர் மோடி!
ஆளும் பாஜகவின் உயர்மட்ட தலைவர்களின் கூட்டத் தொடரை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றமும், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/pm-modi-to-chair-meeting-of-council-of-ministers-for-cabinet-reshuffle-126516/amp
கர்நாடகாவுல நடந்தது இங்க நடக்கும்... தெலங்கானாவை டார்கெட் செய்யும் ராகுல் காந்தி..!
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொண்டவர். ஆனால், இப்போது கதையே வேறு. ஒரு காலத்தில் பாஜக எதிர்ப்பில் தீவிரமாக இருந்த சந்திரசேகர ராவின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட தொடங்கியுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/rahul-gandhi-says-congress-will-not-join-any-opposition-bloc-having-kcr-party-126503/amp
மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்...துணை முதலமைச்சராக பதவியேற்ற அஜித் பவார்..!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இன்று பதிவியேற்றார். அவருடன், அக்கட்சியின் தேசிய தலைவரான சரத் பவாருக்கு நெருக்கமானவராக கருதப்படும் திலீப் வால்ஸ்-பாட்டீல், மூத்த தலைவர்கள் சாகன் புஜ்பால், ஹசன் முஷ்ரிப் உள்ளிட்டோர் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தற்போது, மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/ncp-ajit-pawar-takes-oath-as-deputy-chief-minister-and-joins-nda-government-in-maharashtra-126453/amp
Manipur: ஓயாத கலவரம்.. மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது. இந்நிலையில், விஷ்ணுபுரம் மாவட்டம் கொய்ஜுமந்தாபி கிராமத்தில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிராமவாசிகள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/manipur-violence-two-village-volunteers-killed-in-fresh-firing-in-bishnupur-know-more-details-here-126449/amp
பிரதமர் மோடிக்கு நன்றி... அரசியல் ட்விஸ்ட்டுக்கு மத்தியில் பொடி வைத்து பேசும் சரத் பவார்..!
மகாராஷ்டிரா அரசியலில் இன்று மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, இன்று துணை முதலமைச்சராக பதவியேற்றிருப்பது அரசியலில் புயலை உருவாக்கியுள்ளது. தன்னுடைய அண்ணன் மகன், இரண்டாவது முறையாக கட்சியை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது சரத் பவாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/sharad-pawar-reacts-to-nephew-ajit-pawar-mutiny-says-rebels-not-his-enemies-amid-maharashtra-political-crisis-126496/amp