- அடுத்த கட்டத்துக்கு சென்ற இஸ்ரேல் போர்.. எகிப்து அதிபருக்கு போன் போட்டு பேசிய பிரதமர் மோடி.. என்னாச்சு?
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர், மேற்காசியாவை மிக பெரிய நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் போரால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 8,000 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள், பெண்கள் ஆவர். மேலும் படிக்க..
- ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்கள்.. பக்தர்களை வியப்பில் ஆழ்த்தும் அயோத்தி ராமர் கோயில்..
இன்னும் ஐந்து மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், பிரதமர் மோடியை சந்தித்து திறப்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். மேலும் படிக்க..
- இந்தியாவில் மட்டும் ரூ.50,000 கோடி கல்லா கட்டிய Apple நிறுவனம் - அப்படி என்னதான் நடந்துச்சு?
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஆப்பிள் நிறுவன சாதனங்களின் விற்பனை, 48 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. registrar of companies (RoC) எனப்படும் நிறுவனங்களை பதிவு செய்யும் மத்திய அரசின் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வணிகமானது ஏறக்குறைய 50 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும் படிக்க..
- ’நான் குண்டு வைத்ததற்கு இதுதான் காரணம்’... சரணடைந்த நபர் கொடுத்த அதிர்ச்சி தகவலால் பரபரப்பு..!
கொச்சி களமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று காலை வெடிகுண்டு வைத்தது தம்மனத்தைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பதை கேரள போலீசார் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். அதில், டொமினிக்கின் தொலைபேசியில் ஐஇடி- ஐ வெடிக்க பயன்படுத்திய ரிமோட் கண்ட்ரோலின் காட்சிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் படிக்க..
- ”37 மீனவர்கள் கைது; முற்றுப்புள்ளி வைத்திடுக” - மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் படிக்க..
- ஆந்திராவில் இரண்டு ரயில்கள் மோதி கொண்ட விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், மற்றொரு ரயில் மீது மோதியதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க..
- இரண்டு நாள் பயணமாக குஜராத் செல்லும் பிரதமர் மோடி.. பயணத்திட்டம் என்ன?
ரூபாய் 5,950 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக குஜராத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது நர்மதா மாவட்டத்தில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரதமர் மரியாதை செலுத்துகிறார். அதே போல் இன்று காலை பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோயிலில் சாமி தரிசனம் செய்வார் என்று ஆட்சியர் வருண் பனார்வால் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..