Morning Headlines:
- பிரதமர் மோடி - ஜோ பைடன் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தில் இரண்டாவது நாளான இன்று வாஷிங்டன் சென்றடைந்தார். இங்கு அவர் வர்ஜீனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் ஜில் பைடனை சந்தித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரை வரவேற்றனர்.
செய்தியாளர்கள் சந்திப்பு:
இன்று மாலை வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் ஜோ பைடன் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வாசிக்க..
"நான் மோடியின் ரசிகன்…" - எலன் மஸ்க்!
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க அரசுப் பயணத்தின் போது, பிரபல தொழிலதிபர், உலக பணக்காரர் எலன் மஸ்க்கை, நியூயார்க்கில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, எலன் மஸ்க் தன்னை ஒரு மோடி ரசிகர் என்று விவரித்த சம்பவமும் நடைபெற்றது.
நான் மோடியின் ரசிகன்
உலகின் வேறு எந்த பெரிய தேசத்தையும் விட இந்தியா அதிக நம்பிக்கையை கொண்டுள்ளது என்று மஸ்க் பாராட்டினார். இந்தியாவின் வளர்ச்சியில் மோடியின் ஆழமான அக்கறையை ஒப்புக்கொண்ட மஸ்க், நாட்டில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்ய டெஸ்லாவை வலியுறுத்தியதற்காக பிரதமரைப் பாராட்டினார். மேலும் அதற்கான நேரம் வர காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். "அவர் இந்தியாவிற்கு சரியானதைச் செய்ய விரும்புகிறார் என்று என்னால் சொல்ல முடியும். அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார், புதிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார், ஆனால் அதே நேரத்தில், அதில் இந்தியாவின் நன்மையும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். நான் மோடியின் ரசிகன்" என்று மஸ்க் ANI வீடியோவில் கூறினார்.மேலும் வாசிக்க.
- யோகா இந்தியாவில் தோன்றி இருந்தாலும் அதற்கு ”ராயல்ட்டி” கிடையாது - அமெரிக்காவில் பிரதமர் மோடி
சர்வதேச யோகா தினத்தையொட்டி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடத்தில் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் தனது 2வது நாளை தொடங்கினார். பின்னர், அவர் வாஷிங்டன் செல்கிறார், அங்கு அதிகாரப்பூர்வமாக அரசு பயணம் தொடங்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, யோகாவின் ஒருங்கிணைந்த மற்றும் ஆற்றல்மிக்க தன்மை குறித்து வலியுறுத்தினார்.
அதுகுறித்து இங்கு காணலாம்.
- "ஒவ்வொரு தேசிய இனமும் இன்று இங்கு பிரதிநிதித்துவம் செய்யப்படுவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது."
- "யோகா என்பது நம்மை ஒன்றிணைக்கும் ஒரு அற்புதமான விஷயம், யோகா என்றால் ஒன்றுபடுவது"
- "யோகா இந்தியாவில் தோன்றியது, இது மிகவும் பழமையான பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டு, பழமையானது என்றாலும் தற்போதும் யோகா புழக்கத்தில் உள்ளது மற்றும் ஆற்றல் வாய்ந்தது".மேலும் வாசிக்க..
- மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மின்னல் தாக்கியதில் 9 கால்நடைகளும் உயிரிழந்ததாக மால்டா மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் வாசிக்க.