National Headlines July 20:
Parliment Monsoon Session: பரபரப்பான அரசியல் சூழல்.. இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. நிறைவேற்றப்படும் மசோதாக்கள் என்னென்ன?
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர். வழக்கமாக நாடாளுமன்ற கூட்டம் ஆண்டுக்கு மூன்று முறை நடக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்ட்தொடர், குளிர்கால கூட்டத்தொடர். அந்த வகையில் பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்கனவே நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/the-monsoon-session-of-parliament-which-begins-today-at-the-new-parliament-complex-will-continue-till-august-11-129930/amp
அவசரமாக தரையிறங்கியது சோனியா காந்தி பயணித்த விமானம்.. நடந்தது என்ன?
ராகுல் காந்தி சென்ற விமானம், சிறு தொழில்நுட்ப தேக்கத்தின் காரணமாக அவசரமாக போபாலில் தரையிறங்கிய போது, விமானத்தில் சோனியா காந்தி ஆக்சிஜன் மாஸ்க் அணிந்திருந்த புகைப்படத்தை ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார். 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் பணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 23-ஆம் தேதி பாட்னாவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/rahul-gandhi-picture-of-soniya-gandhi-wearing-oxygen-mask-129907/amp
Adani Criticised Hindenburg Report : ’எங்கள் நற்பெயரை கெடுக்கவே வெளியிடப்பட்டது ஹிண்டன்பர்க் அறிக்கை ..’ கடுமையாக சாடிய கௌதம் அதானி!
அதானி குழுமத்தின் வளர்ச்சி சிலருக்கு பிடிக்காமல் இருப்பதாலும் அதானி குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடப்பட்டதாக அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பேசியுள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி 27 அன்று, ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் கணக்கு மோசடி மற்றும் பங்குச் சூழ்ச்சி செய்ததாக அதானி குழுமம் மீது குற்றம் சாட்டியது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/gautum-adani-once-again-criticised-the-hindenburg-report-at-their-31st-annual-general-meeting-129913/amp
Senthil Balaji Case: மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிங்க.. செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட திட்டம்!