தமிழ்நாடு:
- பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை விண்ணப்பம் : வீடு வீடாக சென்று டோக்கன்கள் இன்று முதல் விநியோகம்
- மகளிர் உரிமை தொகைக்கான டோக்கன் விநியோகிப்பதால் ரேஷன் கடைகளின் அன்றாட செயல்பாடுகள் பாதிக்காது - அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
- டாஸ்மாக்கில் வெளிநாட்டு மதுபானங்கள் விலை உயர்வு - நிர்வாகம் அறிவிப்பு
- மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை; மோடிக்கு, இ.டிக்கும் பயப்பட மாட்டேன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- மாவட்ட பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளாக 3 ஐஏஎஸ் நியமனம்: தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவிப்பு
- இந்தியா வெல்லும், அதை 2024 சொல்லும் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா டிக்கெட்டுகளின் விலை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
- அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 தராதது ஏன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
- டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியா:
- நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: 31 மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட இருப்பதாக தகவல்
- மத்திய அரசின் சட்டப்படி ஆன்லைன் சூதாட்டம் தடுக்கப்படும் என மத்திய அரசு வாதம்
- அதானி குழுமத்தின் 31வது ஆண்டு நடந்த வருடாந்திர கூட்டத்தின் போது ஹிண்டன்பர்க் அறிக்கையின் பொய் தன்மை குறித்து மீண்டும் ஒரு முறை சாடியுள்ளார் கவுதம் அதானி
- பகுஜன் சமாஜ் கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
- வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 330 இடங்கள் கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றிப்பெரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- இன்று இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.. மீனவர்கள் பிர்ச்சனைக்கு தீர்வு எட்டப்படுமா?
உலகம்:
- அல்ஜீரியாவில் பஸ்-கார் நேருக்கு நேர் மோதியதில் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
- வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
- வடகொரியாவுக்கு ஊடுருவிய அமெரிக்க ராணுவ வீரர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
- பிரிக்ஸ் நாடுகளில் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு
- வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
விளையாட்டு:
- ஏசிசி ஆடவர் ஆசியக் கோப்பை 2023 தொடரின் 12வது போட்டியில் இந்தியா ஏ அணி, பாகிஸ்தான் ஏ அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- நீண்டநாள் காத்திருப்புக்கு பிறகு ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
- இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமும், ஒலிம்பிக்கில் பதக்கமும் வென்ற பி.வி.சிந்து, கொரியா ஓபன் தொடரின் இரண்டாம் சுற்றிலே தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
- ஆஷஸ் தொடர்: முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.
- டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்களை எடுத்து இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் புதிய சாதனை படைத்துள்ளார்.