National Headlines: சச்சின் பைலட் போர்க்கொடி.. சித்தராமையா வீட்டுமுன் ராமர் போஸ்டர்..இன்றைய தேசிய தலைப்புச் செய்திகள்

ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.

Continues below advertisement
  • உருவாகிறது புதிய கூட்டணி..? டெல்லியில் முக்கிய மீட்டிங்... சந்தித்து கொண்ட முக்கிய தலைவர்கள்..!

மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Continues below advertisement

இந்நிலையில், சிவசேனா உத்தவ் அணியின் இளம் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே, இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது டெல்லி இல்லத்தில் சந்தித்து தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தாக்கரே, தன்னை சந்தித்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் கெஜ்ரிவால். மேலும் படிக்க

  • சித்தராமையா வீட்டின் முன் ஒட்டப்பட்ட ஹனுமன், ராமர் உருவ போஸ்டர்கள்: கர்நாடகாவில் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து பெங்களூரில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சித்தராமையா வீட்டின் முன் ஒட்டப்பட்ட ராமர் மற்றும் ஹனுமன் திருவுருவம் பொறிக்கப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன. 

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வீட்டின் முன்பு ராமர் மற்றும் ஹனுமன் ஆகிய திருவுருவங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பின் அந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. மேலும் படிக்க

  • கர்நாடகாவும் காங்கிரஸும்...! பாஜகவுக்கு சொல்லும் பாடம் இதுதான்... மோடி இழந்த வியூகம் என்ன?

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் வீழ்ந்து பாஜக தோல்வியுற்றதற்கான காரணங்கள் என்ன என்பதை, இந்த தொகுப்பில் அறியலாம்.

”கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசியலில் பாஜகவின் ஆதிக்கம் மற்றும் பெரும்பான்மையைப் பெறத் தவறிய மாநிலங்களில் கூட அரசாங்கத்தை கைப்பற்றும் திறன் ஆகியவற்றிற்கு மத்தியில்,  கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.”மேலும் படிக்க

  • சொந்த கட்சிக்கு எதிராகவே யாத்திரை.. சச்சின் பைலட் மீண்டும் போர்க்கொடி.. ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு..!

ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த தலைவர் கெலாட் முதலமைச்சராகவும் இளம் தலைவர் சச்சின் பைலட் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். மேலும் படிக்க

Continues below advertisement