Morning Headlines July 15: 


UCC: அமலுக்கு வருகிறதா பொது சிவில் சட்டம்? சட்ட ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்


சமீப காலமாக, பொது சிவில் சட்டம் தொடர் பேசுபொருளாக மாறி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்து. கடந்த மாதம், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களுக்கு தனி சட்டங்கள் என்ற இரட்டை அமைப்புடன் நாடு இயங்க முடியாது" என்றார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/law-commission-extends-deadline-for-submitting-views-on-ucc-till-july-28-know-more-details-here-128983/amp


Chandrayaan 3 Launched: 40 நாள் பயணத்திற்கு பின் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவை சென்றடையும் சந்திரயான் 3.. திட்டமிட்டப்படி வெற்றியை நிலைநாட்டுமா?


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் -2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான் -2 விண்கலம் உருவாக்கப்பட்டது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/chandrayaan-3-which-was-launched-today-will-land-on-the-moon-after-40-days-on-august-23-according-to-isro-128929/amp


ரெகுலேட்டர் சேதத்தால் மோசமடைந்த வெள்ள நிலைமை… ராணுவம், என்டிஆர்எஃப் உதவியை நாடிய கெஜ்ரிவால்!


யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்வதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக டெல்லி தொடர்ந்து கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை ராணுவம் மற்றும் என்டிஆர்எஃப் உதவியை நாடியுள்ளார். யமுனை ஆறு 205.33 மீட்டரான அபாயக் குறியைத் தாண்டிய நான்கு நாட்களுக்குப் பிறகு, ஐடிஓ, சாந்தி வான், ராஜ்காட், அங்கூரி பாக் மற்றும் பல பகுதிகளில் அதிக நீர் தேங்கியுள்ளது.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/delhi-cm-kejriwal-seeks-army-ndrf-help-as-regulator-damage-worsens-flood-situation-128923/amp


Ajith Pawar : முக்கிய அமைச்சர் பதவிகளை தட்டித்தூக்கிய அஜித் பவார்.. விழி பிதுங்கும் ஏக்நாத் ஷிண்டே.. கையை விரித்த பாஜக






மகாராஷ்டிர அரசியலில் சமீபத்தில் உச்சக்கட்ட திருப்பம் அரங்கேறியது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் நேற்று துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/ncp-ajit-pawar-gets-finance-in-maharashtra-8-more-get-ministries-know-more-details-here-128928/amp


Chandrayaan 3 Success: 'சந்திரயான் 3.. அசைக்க முடியாத அர்ப்பணிப்பு’ .. 'விண்வெளித்துறையில் பொன்னாள்’ .. தலைவர்கள் வாழ்த்து


நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் சந்திரயான்-3 ஐ இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு மற்றும் சாதனையை நிறைவேற்ற அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/chandrayaan-3-launched-successfully-political-leaders-celebrities-reaction-wishes-128904/amp