முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் ரூ.3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து. 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைக்கும் -முதலமைச்சர் ஸ்டாலின்.ஜெர்மனியில் மொத்தத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தகவல்.
திருவள்ளூரில் போலீசார் தடியடி
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் புலம்பெயர் தொழிலாளர்கள் குடியிருப்பில் அமரேஷ் பிரசாத் (35) என்பவர் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு. இறப்புக்கு நீதி கோரி நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை. அப்போது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதை அடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் அவர்களை போலீசார் கலைத்தனர்.
பாஜகவிற்கு அமைச்சர் பதிலடி
"Knorr Bremse 120 ஆண்டுகால வரலாறு கொண்ட ஜெர்மானிய நிறுவனம். இவர்களுக்கு தமிழ்நாட்டில் உற்பத்தி சார்ந்த எந்த தொழிற்சாலையும் கிடையாது. தற்போது ரூ.2,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் முதல் ரயில் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது” சென்னையில் உள்ள நிறுவனத்திற்கு ஜெர்மனி சென்று ஒப்பந்தமா? என்ற நயினார் விமர்சனத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிலடி
உங்களுக்கு கன்னடம் தெரியுமா? -சித்தராமையா
மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கன்னடம் தெரியுமா? எனக் கேட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. “கன்னடம் எனது தாய்மொழி இல்லை. ஆனாலும், நாட்டின் அனைத்து மொழிகள், கலாசாரங்கள் மற்றும் மரபுகளை மிகவும் மதிக்கிறேன்” என திரௌபதி முர்மு பதில்
NINJA ZX-6R அறிமுகம்
2026ம் ஆண்டிற்கான Ninja ZX-6R மாடல் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது Kawasaki.இதன் விலை ரூ.11.69 லட்சமாக நிர்ணயம். முந்தைய மாடல் பைக்கின் விலையை விட ரூ.40,000 அதிகம்.
இலங்கை அதிபர் திட்டவட்டம்
கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்” யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் அனுர குமார திட்டவட்டம்
ChatGPT-யால் பறிபோன உயிர்கள்
அமெரிக்கா: Paranoia என்ற உளவியல் நோயால் பாதிக்கப்பட்ட எரிக் (56) என்ற நபர் ChatGPT-யின் பேச்சை கேட்டு தாயை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்!ChatGPT-க்கு பாபி என பெயரிட்டு தினமும் பேசி வந்த நிலையில், “உன் தாய் ஒரு பேய். மருந்து கொடுத்து உன்னை கொல்ல முயற்சிக்கிறார்” எனக் கூறியுள்ளது. இதுகுறித்து OpenAl நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன் ChatGPT-யால் அமெரிக்க இளைஞர் ஒருவர் தற்கொலை செய்தார்.
நிலச்சரிவால் அழிந்த கிராமம்
சூடான்: டார்பர் மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 1,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், மக்கள் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தனர்.
உலகின் அமைதியான நாடு
உலக அமைதி குறியீடு வெளியிட்ட 2025ம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில், தொடர்ந்து 17வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது ஐஸ்லாந்து. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 115வது இடத்தில் உள்ளது.
ஓய்வை அறிவித்த ஸ்டார்க்
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பு. 2027 ODI உலக கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதால் இம்முடிவு என விளக்கமளித்துள்ளார்.