- கரூரில் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்தது.
- கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2-வது நாளாக இன்று விசாரணை.
- கரூர் துயர சம்பவம் நடந்து 34 மணி நேரத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய் வீட்டை விட்டு வெளியே வந்தார். சனிக்கிழமை இரவு வீட்டிற்குள் சென்ற அவர், இன்று தான் வெளியே வருகிறார்.
- கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை விசாரிக்க புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு. ஒரு கிராம் ரூ.10,700-க்கும், ஒரு சவரன் ரூ.85,600-க்கும் விற்பனை.
- ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, “ஆடுகளத்தில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரிலும்“ இந்தியா வென்றதாக பிரதமர் மோடி பெருமிதம்.
- தவெக தலைவர் விஜய்யை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, சுமார் 15 நிமிடங்கள் பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. கரூர் சம்பவம் தொடர்பாக பேசியதாக தகவல்.
- ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா முதலில் தாக்காது என்றும், ஆனால், ரஷ்யாவை அவர்கள் தாக்க முற்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உறுதி.
- உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகள் நடத்திய வான்வழித் தாக்கதலில் 4 பேர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்.
- ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையை வாங்க மறுத்து, வெறும் கைகளில் வெற்றியை கொண்டாடினர்.
- ஸ்பெயினில் நடைபெற்ற 24H Series கார் பந்தயத்தில், அஜித்குமார் ரேஸிங் அணி 3-ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
Top 10 News Headlines: வீட்டிலிருந்து வெளியே வந்த விஜய், ஆசிய கோப்பை-மோடி பெருமிதம், ஐரோப்பாவிற்கு ரஷ்யா எச்சரிக்கை-11 மணி செய்திகள்
ஸ்ரீராம் ஆராவமுதன் | 29 Sep 2025 10:58 AM (IST)
Top 10 News Headlines Today Sep. 29th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.
11 மணி தலைப்புச் செய்திகள்
NEXT PREV
Published at: 29 Sep 2025 10:58 AM (IST)