தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

Continues below advertisement

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 4 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் 39 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விஜய் மீது உதயநிதி குற்றச்சாட்டு

Continues below advertisement

”மக்களை சந்திப்பது தலைவர்களின் உரிமை; கூட்டத்தை கட்டுப்படுத்துவது தலைவரின் பொறுப்புஉரிய நேரத்திற்கு வருவது உள்ளிட்டவற்றை செய்திருக்க வேண்டும் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். துபாயில் அருந்து அவசர அவசரமாக சென்னை திரும்பிய உதயநிதி, கரூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

கரூர் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை நீலாங்கரை இல்லத்தில் த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல். முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாகவும் தகவல்.

விஜய்க்கு எடப்பாடி அட்வைஸ்

“தவெக நடத்திய முந்தைய கூட்டங்களின் நிலையை ஆய்வு செய்து, அதற்கேற்ப முழு பாதுகாப்பை அரசு, காவல்துறை தந்திருக்க வேண்டும். அறிவித்த நேரத்தில் கூட்டம் நடத்தாமல், பல மணி நேரம் தாமதமாக வந்து கூட்டம் நடத்துகிறார்கள் அரசியல் கட்சி தலைவரும் நிலைமையை கூர்ந்து கவனித்து ஆலோசித்து, செயல்பட்டிருக்க வேண்டும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த விவகாரம் மாநிலத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இனி இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்.

காவல்துறை விளக்கம்

“கரூர் கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு தரப்பட்டது; வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூட்டநெரிசல் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. ஆணைய அறிக்கைக்கு பிறகே அடுத்த நடவடிக்கை - கரூர் மருத்துவமனையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பேட்டி

க்ரூப் 2 தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் இன்று பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் துவங்கி நடந்து வருகின்றன. 645 இடத்துக்கு நடத்தப்படும் தேர்வை 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பு

லே கலவரத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பு இருப்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக லடாக் போலீஸ் டிஜிபி பரபரப்பு குற்றச்சாட்டு

கொலம்பியா அதிபரின் விசா ரத்து 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அங்கு சென்றபோது அவரை கண்டித்து பாலஸ்தீன ஆதரவு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவும் கலந்து கொண்டார். இதனையடுத்து நாட்டில் வன்முறையை தூண்டியதாக குஸ்டாவோ பெட்ரோவின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் பலப்பரிட்சை

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. துபாயில் இரவு 8 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. நடப்பு ஆசியக்கோப்பையில் ஏற்கனவே இரண்டு முறை பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.