• கல்வியில் சிறந்த தமிழ்நாடு பங்கேற்றதற்கும், காலை உணவுத் திட்டம் தெலங்கானாவில் செயல்படுத்தப்படும் எனற் அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அறிவிப்பிற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவிப்பு.
  • சென்னையில் அரசியல் ரீதியாக தான் யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் விளக்கம். ஓபிஎஸ்-ஐ சந்தித்ததாக வதந்த பரப்பப்படுவதாக வேதனை.
  • கட்சி தொடங்கிய பின் முதன் முறையாக புதுச்சேரிக்கு செல்ல இருக்கும் விஜய். பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி, முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு வழங்கிய தவெக நிர்வாகிகள்.
  • காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தனியார் பள்ளி இயக்குனர் எச்சரிக்கை. நீதிமன்ற தடையை சுட்டிக்காட்டி சுற்றறிக்கை வெளியீடு.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ.10,550-க்கும், ஒரு சவரன் ரூ.84,400-க்கும் விற்பனை. வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவில் கிராம் ரூ.153-ஆக உயர்வு.
  • மத்திய வடக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தகவல்.
  • நாட்டிலேயே முதன் முறையாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏஐ வசதியுடன் கூடிய பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
  • லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், லே நகரில் இன்றும் ஊரடங்கு தொடர்கிறது.
  • காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை, இந்தியா-பாக். இடையே நீண்ட காலமாக நிலவும் இந்த பிரச்னைக்கு அந்த இரு நாடுகளும் தீர்வு காண்பதே சரி என அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி கருத்து.
  • அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மருந்துகளுக்கும் 100% வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு.
  • வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனிர் சந்தித்து பேச்சு.
  • ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று இலங்கை அணியை எதிர்கொள்கிறது இந்தியா. இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே இந்தியா தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
  • ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான். 28-ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது.