தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், கடந்த சில நாட்களாக, ஜவுளிக் கடைகளில் 2,500 ரூபாய்க்கு மேல் ஆடைகள் வாங்கும்போது, பில்லை பிரித்துப் போடுமாறும், இல்லையென்றால் ஜிஎஸ்டி அதிகமாகிவிடும் என்றும் ஒரு குறுந்தகவல் வைரலாக பரவி வருகிறது. இதில் உண்மை என்ன.? தற்போது தெரிந்துகொள்ளலாம்.

Continues below advertisement

ஜிஎஸ்டி-யில் கொண்டுவரப்பட்ட மாற்றம்

சரக்கு மற்றும் சேவை வரி, அதாவது ஜிஎஸ்டி-யில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு, கடந்த 22-ம் தேதி முதல் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஜிஎஸ்டி-யில் 5, 12, 18, 28 என நான்கு அடுக்கு வரி இருந்தது. ஆனால், சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி-யில் 5, 18 என்ற இரண்டு அடுக்கு வரி மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால், பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்த நிலையில், சில பொருட்களின் விலை மட்டும் சற்று அதிகரித்துள்ளது. அதில், குறிப்பாக நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகளுக்கான வரியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

ரூ.2,500-க்கு மேல் ஆடை வாங்கினால் ஜிஎஸ்டி அதிகமா.?

பண்டிகை காலம் என்றாலே மக்கள் ஆடைகள் வாங்குவதற்காக படையெடுப்பார்கள். அதிலும், தீபாவளி என்றால் ஸ்பெஷல் தான். ஆடைகளை வாங்கி குவித்துவிடுவார்கள். அடுத்த மாதம் தீபாவளிப் பண்டிகை வருவதால்,  இப்போதிலிருந்தே ஆடைகளை வாங்க, ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கிவிடும்.

இந்நிலையில், புதிய சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகளின்படி, நெய்த மற்றும் நெசவு செய்யப்பட்ட ஆடைகளுக்கான வரி மாற்றத்தின்படி, ஒரு ஆடையின் விலை 2,500 ரூபாய்க்கு மேல் இருந்தால், அதற்கு ஏற்கனவே இருந்த 12 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது.

உண்மை அறியாமல் வைரலாகும் குறுந்தகவல்

இந்த நிலையில், இந்த உண்மையை அறியாமல், மொத்தமாக ஜவுளி வாங்கும்போது 2,500 ரூபாய்க்கு மேல் பில் வந்தால், அதை பிரித்துப் போடும்படியும், இல்லையென்றால் ஜிஎஸ்டி அதிகமாகிவிடும் என்றும் ஒரு குறுந்தகவல் சில நாட்களாக வைரலாகி வருகிறது.

ஒரு ஆடையின் விலை மட்டும் 2,500 ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்த ஆடைக்கு மட்டும்தான் ஜிஎஸ்டி 18 சதவீதமாக போடப்படும் என்றும், அதற்கு கீழ் விலை உள்ள துணிகளை மொத்தமாக எவ்வளவு தொகைக்கு வாங்கினாலும், அதற்கு 12 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி போடப்படும் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகைக்கு மக்கள் ஜவுளி எடுக்கத் தொடங்கிவிட்ட நிலையில், இந்த குறுந்தகவலால் கடைக்காரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் இது குறித்த உண்மையை தெரிந்துகொண்டால் நல்லது என அவர்கள் கருதுகின்றனர்.