- சட்டப்பேரவைக்கு நேற்று கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள், இன்று கிட்னிகள் ஜாக்கிரதை என பேட்ஜ் அணிந்து பேரவைக்கு வந்தனர்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 95 ஆயிரம் ரூபாயை கடந்தது. இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் ஒரு சவரன் ரூ.95,200-க்கும், கிராமிற்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,900-க்கும் விற்பனை.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
- தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
- தமிழ்நாட்டில் அக்டோபர் 16, 17 தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
- வானிலை மையத்தின் மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
- ஆந்திர மாநிலம் கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், மின்பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை.
- பீகாரில் 101 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை 3 கட்டங்களாக வெளியிட்டது பாஜக. தற்போது எம்எல்ஏ-க்களாக உள்ள 16 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
- ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என பிரமர் மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு.
- ஹமாஸ் அமைப்பு, போர் நிறுத்த விதிகளை மீறினால் தான் சொல்லும் போது இஸ்ரேல் தனது படைகளை காசாவில் நிலைநிறுத்தி தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாக தகவல்.
- தென்கிழக்க ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் அதிபர் அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சியை கைப்பற்றியது ராணுவம். தளபதி மைக்கேல் ராண்ட்ரியானிரினா புதிய அதிபராக பொறுப்பேற்பு.