Trump PM Modi: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


ரஷ்ய எண்ணெயை புறக்கணிக்கும் இந்தியா?


ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நடவடிக்கைகளை இந்தியா நிறுத்த இருப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியாக ரஷ்யாவை தனிமைப்படுத்த இது ஒரு மிகப்பெரிய நடவடிக்கை எனவும் அவர் பேசியுள்ளார். 


வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்த நடவடிக்கையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால், இனி ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இது ஒரு மிகப்பெரிய நடவடிக்கை.  ​​இந்தியாவால் இறக்குமதிகளை உடனடியாக நிறுத்த முடியாது. இது பல்வேறு நிலைகளை உள்ளடக்கிய ஒரு சிறிய செயல்முறை, ஆனால் அந்த செயல்முறை விரைவில் முடிந்துவிடும். இப்போது சீனாவையும் இதே முடிவை எடுக்க நடவடிக்கை எடுப்போம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



ரஷ்யாவை தவிர்க்கும் இந்தியா?


ட்ரம்பின் கருத்தின் மூலம், அமெரிக்கா உடனான வர்த்தககத்திற்காக, ரஷ்யா உடனான பல ஆண்டு கால உறவை இந்தியா முறித்துக் கொள்ள உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம், பிரதமர் மோடி தொடர்பான ட்ரம்பின் பேச்சுக்கு, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் தற்போது வரை எந்த கருத்தும்தெரிவிக்கவில்லை. செய்தி நிறுவனங்கள் தரப்பில் மின்னஞ்சல் மூலம் தூதரகத்திற்கு பல கேள்விகள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. 


ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால், அது சர்வதேச ஆற்றல் விவகாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக கருதப்படும். உக்ரைன் உடனான போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவின் பொருளாதாரத்தை சிதைக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.


ரஷ்யாவிற்கு மிகப்பெரிய அடி:


ரஷ்யாவின் முன்னணி எரிசக்தி வாடிக்கையாளர்களில் ஒருவராக திகழும் இந்தியாவின் முடிவு மிகப்பெரிய மாற்றத்தை குறிக்கும். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளையும் மீறி ரஷ்ய கச்சா எண்ணெயை இன்னும் இறக்குமதி செய்யும் பிற நாடுகளின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கி உக்ரைன் போரை இந்தியா வாங்குவதாக குற்றம்சாட்டி, ட்ரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது இருநாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இந்தியாவிற்கு எதிராக ஏராளமான கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அந்த சூழல் மெல்ல மெல்ல தனிந்தும் வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா உறுதி அளித்துள்ளதாக ட்ரம்ப் பேசியுள்ளார். இதுதொடர்பாக அரசு தரப்பில் விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.