• மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம். இவ்விவகாரம் குறித்து எப்போது வேண்டுமானாலும் பிரதமரை சந்திக்க தான் தயாராக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Continues below advertisement

  • கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்களை, காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியீடு. பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் கடந்த ஜூலையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர்.
  • மாவட்ட வாரியாக, உள் அரங்குகளில் மக்கள் சந்திப்பை நடத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை முதல் காஞ்சிபுரத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க உள்ளதாகவும் தகவல.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.11,630-க்கும், ஒரு சவரன் ரூ.93,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • வங்கக் கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
  • இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 692.57 பில்லியனாக அதிகரிப்பு. நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களில் மட்டும் 5.54 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்.
  • தான் சம்பாதித்தவற்றில் 90 சதவீதத்தை கட்சிக்கும், தேர்தல் பிரசாரத்திற்கும் செலவழித்துவிட்டதாகவும், அதனால் பீகார் மக்கள் தனது கட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1,000 நிதியாக வழங்குமாறும் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இரண்டரை வயதுக் குழந்தையின் காயத்திற்கு ஃபெவிகுவிக் பசையை பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
  • தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினர் அளித்த வரவேற்பில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
  • செயற்கை நுண்ணறிவை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்றும் ஏஐ ஒரு புரட்சிகரமான வளர்ச்சி என்றாலும், தற்போது அதில் சில பகுத்தறிவற்ற தன்மை உள்ளதாகவும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி பந்துவீசி வருகிறது.

 

 

Continues below advertisement