மத்திய அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
“கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்கு கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?”- முதலமைச்சர் ஸ்டாலின்
கோவையில் ஆர்பாட்டம்
கோவை-மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கி தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக, மத்திய அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கோவையில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.
3 இளைஞர்கள் பலி
ராணிப்பேட்டை: ரயில்வே மேம்பாலத்தில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு. தினேஷ் (20), சாஜன்(26), பாலமுருகன்(19) ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் அடங்கிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.
தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர்
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை தென் ஆப்பிரிக்கா ஜோஹன்னஸ்பர்க் செல்கிறார்பிரதமர் நரேந்திர மோடி. நாளை முதல் 23ஆம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்; ஜி-20 உச்சி மாநாட்டின் மூன்று அமர்வுகளிலும் பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிஷ்குமார் பதவியேற்பு
பீகார் மாநில முதலமைச்சராக மீண்டும் இன்று பதவியேற்கிறார் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார். 10ஆவது முறையாக முதல்வராகும் நிதிஷ் குமார் 2005ஆம் ஆண்டு முதல் நடைபெறும் ஒவ்வொரு தேர்தல் முடிவிலும், மாநில முதலமைச்சராக பதவியேற்று வருகிறார்.
கோவை, மதுரை மெட்ரோ - மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் தவறுகள் இருக்கும் காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மக்களை தங்களின் வழக்கமான போக்குவரத்தில் இருந்து மெட்ரோவிற்கு மாற்றும் வகையில் தமிழக அரசின் பரிந்துரை இல்ல - மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டாட்
மெட்டா வெற்றி
இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் செயலிகளை வாங்கி, சமூக ஊடக சந்தையில் Meta ஏகபோக உரிமைகளைப் பெற்றதாக அமெரிக்க அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி. 5 ஆண்டுகளாக வழக்கை விசாரித்த கொலம்பியா நீதிமன்றம், டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட செயலிகளிடம் இருந்து கடுமையான போட்டியை Meta எதிர்கொள்வதாக கூறி தள்ளுபடி செய்தது.
சரித்திரம் படைத்த குரோக்கா
கால்பந்து உலக கோப்பைக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற பெயரைப் பெற்றுள்ளது கரீபியன் தீவுகளில் ஒன்றான குராக்கோ. 171 சதுர மைல் பரப்பளவை மட்டுமே கொண்டுள்ள இந்த நாட்டில் 1.50 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
சாதனை படைத்த ஹோப்
ஐசிசி-யின் அனைத்து முழு நேர உறுப்பு நாடுகளுக்கு (11) எதிராக சதம் விளாசிய முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார் மேற்கிந்திய தீவுகளின் ஹோப் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் (109*) இந்த சாதனையை படைத்தார்.