Watch Video: சொகுசு காரை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்ததோடு, ஆபாசமாக செயல்பட்ட நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வைரல் வீடியோ:
புனேவில் சொகுசு காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கிய ஒருவர், சாலையோரம் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான பிறகு அந்த நபர் தப்பி ஓடியிருந்தார், ஆனால் சனிக்கிழமை இரவு அண்டை மாவட்டமான சதாரா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் யெரவாடாவின் சாஸ்திரிநகர் பகுதியில் நடந்தது, இதை நேரில் பார்த்த ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
வழக்குப்பதிவு:
இந்த வீடியோ குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காரை ஓட்டி வந்த கௌரவ் அஹுஜா மற்றும் அவரது சக பயணி பாக்யேஷ் ஓஸ்வால் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், வேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டுதல், பொது சாலைகளில் ஆபத்தை ஏற்படுத்துதல் மற்றும் பிற குற்றங்களுக்காக பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஓஸ்வால் அன்று மாலையே அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். வீடியோ வெளியானதிலிருந்து தலைமறைவாக இருந்த அஹுஜா, இரவு நேரத்தில் சதாராவில் உள்ள கரட் தாலுகாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் அந்த இளைஞர் குடிபோதையில் இருந்ததாக உணர்ந்ததால், ஓஸ்வால் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார்.
வீடியோவில் இருப்பது என்ன?
பிஎம்டபள்யூ கார் நடுரோட்டில் நிறுத்தப்பட்டு ஒருபக்க கதவு திறந்த நிலையில் இருப்பதில் இருந்து வீடியோ தொடங்குகிறது. அதில், ஓஸ்வால் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் வேளையில், அஹுஜா ஒரு போக்குவரத்து சந்திப்பில் சிறுநீர் கழித்துவிட்டு வேகமாகச் செல்கிறார். அவரை ஒருநபர் பின்தொடர்ந்து சென்று வீடியோ பதிவு செய்ய, அஹுஜா தனது பேண்டை கீழே இறக்கி ஆண் உறுப்பை எடுத்துக்காட்டியுள்ளார். தொடர்ந்து காருக்குள் ஏறியபிறகும், மீண்டும் தனது பேண்டை இறக்கி தனது ஆணுறுப்பை கைகளால் எடுத்துக்காட்டி விட்டி காரை வேகமாக ஒட்டி சென்ற” காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து அஹுஜா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கிளிப்பை வெளியிட்டார். அதில் "தயவுசெய்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அடுத்த எட்டு மணி நேரத்தில் நான் சரணடைவேன்" என்று கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.