கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின்
கொளத்தூர் பெரியார் நகரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள அமுதம் அங்காடியின் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக அங்கு வருகை தந்த முதலமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
ஈரோட்டில் விஜய்
ஈரோடு - பெருந்துறையில் இன்று காலை 11 மணிக்கு மக்கள் சந்திப்பு பரப்புரை நிகழ்ச்சியை நடத்துகிறார் தவெக தலைவர் விஜய். அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஏற்பாட்டில், ஈரோட்டில் விஜய் தனது முதல் பரப்புரையை நடத்துகிறார்.
"23ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பியூஷ்”
“எனது பரப்புரைப் பயணம் ஜனவரி 9ஆம் தேதி நிறைவு பெறுகிறது. பரப்புரை நிறைவுக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அல்லது அமித் ஷா வருகை தருவார்கள் வரும் டிசம்பர் 23ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்” - நயினார் நாகேந்திரன் பேட்டி
அணுசக்தியில் தனியார் பங்களிப்பு - மக்களவை ஒப்புதல்!
அணுசக்தி உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கும்| மசோதா மக்களவையில் நிறைவேற்றம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களில் ஒன்றான அணுசக்தி மசோதா, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது. நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு மசோதாவை அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் நிராகரிப்பு.
AI அடிப்படையில் சுங்கக் கட்டணம்
“2026ம் ஆண்டுக்குள் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல், AI அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் முறை வரப்போகிறது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்கலாம். MLFF என்ற AI மூலம் தானாகவே வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்” -நிதின் கட்கரி, சாலை போக்குவரத்து அமைச்சர்
”வெறும் ரூ.1,000க்கு மரபணுப் பரிசோதனை”
மேம்பட்ட மரபணு பரிசோதனைகளை (Genitic Tests) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம். தற்போது இந்த பரிசோதனைகளை செய்ய குறைந்தது ரூ.10,000 செலவாகும் நிலையில், அதை விட பத்து மடங்கு குறைவாக வெறும் ரூ.1,000க்கு வழங்கும் முயற்சியில் ரிலையன்ஸ் ஈடுபட்டுள்ளது.
கர்நாடகாவில் தடை
கர்நாடகாவில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவு. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும், சுகாதார சீர்கேடு அச்சுறுத்தல் காரணமாகவும் தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறினால் தொற்று நோய்களை பரப்புதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை.
மகாராஷ்டிராவில் அமைச்சர் ராஜினாமா
மகாராஷ்டிரா விளையாட்டுத் துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மணிக்ராவ் கோக்டே ராஜினாமா. தன் மீதான மோசடி வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை நாசிக் நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து பதவி விலகினார்.
ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையை பெற்ற யூட்யூப்
ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றது YouTube. 2029 முதல் 2033 வரையிலான ஆஸ்கார் ஒளிபரப்பு உரிமத்தை முதல்முறையாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான YouTubeக்கு வழங்கியது The Academy. அமெரிக்காவின் ABC தொலைக்காட்சி 2028 வரை ஒளிபரப்பு உரிமம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருண் சக்ரவர்த்தி முதலிடம்
20 ஓவர் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தார் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி. சர்வதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் 818 புள்ளிகள் பெற்று முதலிடம்.