ரயில் பயணியர் தங்கள் டிக்கெட்டின் முன்பதிவு இறுதி நிலையை, 10 மணி நேரத்திற்கு முன்னரே அறிந்து கொள்ளும் வகையில், ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

Continues below advertisement

இந்தியன் ரயில்வே

இந்தியாவில் மிக முக்கிய பொது போக்குவரத்தில் ஒன்றாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. உலக அளவிலேயே இந்தியாவின் ரயில் போக்குவரத்து நெட்வொர்க், மிகப்பெரிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. நாள்தோறும் பல லட்சக்கணக்கான பயணிகள், ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

ரயிலில் பயணிப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்னரே, முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. இரண்டு மாதத்திற்கு முன்பு ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவது தொடங்கினாலும், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் தான், பதிவு செய்த டிக்கெட்டின் இறுதிநிலை வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் இறுதி நேரத்தில், காத்திருப்பு பட்டியில் உள்ள டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். 

Continues below advertisement

பயணிகள் கோரிக்கை 

தொலைதூர பயணத்திற்கு திட்டமிடும்வர்களுக்கு, 4 மணி நேரத்திற்கு முன்பு தான் இறுதித் தகவல் வெளியாவதால் அவர்களது பயணத்தையும் மாற்றி அமைக்க முடியாது சூழல் ஏற்படுகிறது. இதனால் முக்கிய தேவைக்காக பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில், இருப்பவர்களும் மிகுந்த பாதிப்படைகின்றனர். இதனால் அட்டவணையை 4 மணி நேரத்திற்கு முன் தயாரிப்பதை விட, 8 அல்லது 10 மணி நேரத்திற்கு முன்பு அட்டவணையை தயார் செய்தால் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கோரிக்கை நாடு முழுவதும் எழுந்தது. 

முன்பதிவு அட்டவணையை 8 மணி நேரத்துக்கு முன் வெளியிட வேண்டும் என பயணியர் சங்கங்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வந்தன. பயணியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் அனைத்து மண்டல ரயில்வேயும் கடந்த ஜூலையிலிருந்து 8 மணி நேரத்திற்கு முன் அட்டவணையை வெளியிட்டு வருகின்றன. 

10 மணி நேரத்திற்கு முன்பதிவு அட்டவணை

இதற்கு ரயில் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் காலை நேரங்களில் புறப்படும் ரயில்களுக்கு, நள்ளிரவில் ரயிலில் அட்டவணைகள் வெளியிடுவதால், காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் தங்களது பயணத்தை நள்ளிரவில் மாற்றி அமைப்பது சிரமமாக இருப்பதாக பயணிகளிடமிருந்து இருந்து கோரிக்கையிலிருந்து.

இதனால் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு, முந்தைய நாள் இரவு 8 மணிக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டு, பயனீருக்கு அறிவிப்பு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று இதர ரயில்களுக்கும் அவை புறப்படும் நேரத்திற்கு, 10 மணி நேரத்திற்கு முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும். இதை உடனடியாக அமல்படுத்த ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.