இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் 5% தள்ளுபடி

Continues below advertisement

அமெரிக்காவிடம் இருந்து பல்வேறு அழுத்தங்கள், தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5% தள்ளுபடியில் தொடரும் என இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா அறிவிப்பு!அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்தியா-ரஷ்யா எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என ரஷ்ய துணைத் தூதரக தலைவர் ரோமன் பாபுஷ்கின் உறுதி

முன்பதிவு:

Continues below advertisement

பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) மூலம் நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்.இதை மேலும் அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அது முழுமை பெறும் பட்சத்தில் நிமிடத்துக்கு 1 லட்சம் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படலாம் என தெரிவிப்பு

காவலர்கள் தேர்வு

தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்.நாளை முதல் வரும் செப்.21ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வரும் நவ.9ம் தேதி எழுத்துத் தேர்வு

ஸ்ரேயாஸ் கேப்டன்

ரோஹித்துக்கு பதிலாக இந்தியாவின் புதிய ஒருநாள் கேப்டனாக ஸ்ரேயாஸை நியமிக்க பிசிசிஐ முடிவு என தகவல்.ஆசிய கோப்பை டி20 தொடருக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோரின் ODI இடங்கள் குறித்தும் தேர்வுக் குழு ஆலோசனை செய்யும் என தெரிவிப்பு

வேட்புமனு தாக்கல்:

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், NDA சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

விஜய் மீது மறைமுக அட்டாக்

“புதிய கட்சி தொடங்குபவர்கள் கூட நமது தலைவர்களின் படத்தை போட்டுதான் கட்சியை தொடங்கும் சூழ்நிலை உள்ளது”மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டு திடலில் எம்.ஜி.ஆர். படம் இடம் பெற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி மறைமுக விமர்சனம்

முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு

மதுரையில் தவெகவின் 2 ஆவது மாநில மாநாடு 3 மணிக்கே தொடங்க உள்ளது; இரவு 7 மணிக்குள் மாநாட்டை முடித்து தொண்டர்களை பாதுகாப்பாக அனுப்பிவைக்க விஜய் திட்டம்முன்னதாக 4 மணிக்கு மாநாட்டைத் தொடங்க திட்டமிட்டிருந்தனர்; மது அருந்திவிட்டு மாநாட்டு திடலுக்குள் வரும் யாரையும் அனுமதிக்க கூடாது என விஜய் உத்தரவு என தகவல்; மாநாடு நடைபெறும் பாரபத்தி திடலில் அதிகாலை முதலே குவிந்த தொண்டர்கள். 

முதல்வர் பயணம்:

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு சுற்றுப்பயணம்"சென்னையில் இருந்து ஆக.30ஆம் தேதி புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணத்தை முடித்துகொண்டு செப்.8ஆம் தேதி சென்னை திரும்புகிறார் - தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

"பொய் வழக்கு தொடுத்து பதவி நீக்குவார்கள்"

“அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளை தொடுத்து, விசாரணை இன்றி 30 நாட்கள் சிறையில் வைத்து பதவி நீக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது"வாக்கு திருட்டு அம்பலப்படுத்தலில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த மசோதா - மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

கோர விபத்து

ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழப்பு! ஈரானில் இருந்து திரும்பிய பேருந்து நேற்றிரவு லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் தீ பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்