நிதி ஒதுக்க பிரதமரிடம் கோரிக்கை

சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான ரூ.2,151 கோடி நிலுவைத் தொகையை, நிபந்தனைகள் இன்றி விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கிடப்பில் உள்ள பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கான ஒப்புதல், நிதி ஒதுக்கீடு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல், நிதியுதவியை விரைந்து வழங்கிட வேண்டும் - பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை

பிரதமர் மோடி ரோட் ஷோ

கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டு, பொன்னேரி முதல் பிரகதீஸ்வரர் கோயில் வரை ரோடு ஷோ செல்கிறார். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விஜய் வீட்டில் வெடிகுண்டு?

த.வெ.க தலைவர் விஜய் வீட்டின் லேன்ட் லைன் எண்ணிற்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல்; மோப்ப நாய் கொண்டு போலீசார் தீவிர சோதனை நடத்திய பின்னர் புரளி என தகவல்ஏற்கனவே பலமுறை போலீசாரிடம் சிக்கிய மரக்காணம் இளைஞர் மிரட்டல் விடுத்ததாக தகவல்

காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வெளியேற்றப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 45,000 கன அடியில் இருந்து 60,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளதுஇன்று காலை 10 மணியளவில் நீர் வெளியேற்றம் 60,000 கன அடியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை தெரிவிப்பு.

தெரு நாய்களை கருணைக் கொலை செய்யலாம்!

நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி. பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் இந்த கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் எனவும், கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் - முறையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அரசாணை

6 பக்தர்கள் பலி

உத்தராகண்ட்: ஹரித்வார் மன்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு; பலர் காயம். கோயில் திருவிழாவில் நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. திருவிழாவில் மின்கசிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓடி நெரிசல் ஏற்பட்டதாக தகவல்

காஸாவில் தலைவிரித்தாடும் பஞ்சம்

இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் காஸாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சத்தால், மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். குடிக்க தண்ணீர் கூட இல்லாமல், ஊடச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் எலும்பும் தோலுமாய் இருக்கும் புகைப்படங்கள் மனதை உருக்குகின்றன.

விமானத்தில் தீ விபத்து

டென்வர் விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான BOEING 737 MAX 8 விமானத்தின் சக்கரத்தில் திடீர் தீ விபத்து. விமானம் புறப்படும் கடைசி நேரத்தில் தீப்பற்றியதால் உடனடியாக நிறுத்தப்பட்டு அவசர அவசரமாக பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர்.

ரிஷப் பண்ட் ரெடி

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின்  2வது இன்னிங்சில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வார் என தகவல். காயத்துடன் விளையாடிய பண்ட் முதல் இன்னிங்சில் அரைசதம் விளாசி இருந்தார். கடைசி நாள் ஆட்டம் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து, 137 ரன்கள் பின்தங்கியுள்ளது.

ஸ்பெயின் பயிற்சியாளர் நிராகரிப்பா? 

“ஸ்பெயின் பயிற்சியாளர்கள் பெப் கார்டியோலா, ஜாவி ஹெர்னாண்டஸ் ஆகியோரிடமிருந்து இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு மெயில் வந்தது. அவற்றின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது. பின்னர் அவை உண்மையானவை அல்ல என்பது தெரிய வந்தது”நிதி பற்றாக்குறை காரணமாக ஜாவி ஹெர்னாண்டஸின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் AIFF விளக்கம்