பட்டாசு ஆலை விபத்து:


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு! 4 அறைகள் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 


முதல்முறையாக குறைந்த தங்க விலை:


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 குறைந்து ₹57,720க்கும், ஒரு கிராம் ₹7,215க்கும் விற்பனையாகிறது. 2025 ஆண்டின் முதல் 3 நாட்கள் உயர்ந்த ஆபரணத்தின் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.


டெல்லியில் கடும் குளிர்: 


டெல்லியில் கடும் மூடுபனி, குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, மூடு காரணமாக டெல்லிக்கு வரவேண்டிய வெளிமாநில ரயில்கள் மற்றும் 90க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமாகி உள்ளது.


ஜல்லிக்கட்டில் மோதல்:


புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே மோதல் வெடித்தது. அடையாள அட்டையின்றி சிலர் மேடையில் ஏறியதற்கு விழா குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல், நாற்காலிகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


கோவை டேங்கர் லாரி விபத்து - ஓட்டுநர் கைது 


கொச்சியிலிருந்து சமையல் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கோவையில் கவிழ்ந்து விபத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், டேங்கர் லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணனை நள்ளிரவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


போலி வழக்கறிஞர் கைது


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரிந்த போலி வழக்கறிஞர் வினோத்குமார் கைது. அவரிடம் பணம் கொடுத்து ஏமார்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


குழந்தை உயிரிழப்பு - மூவர் கைது


விக்கிரவாண்டியில் பள்ளி கழிவு நீர் தொட்டியில் LKG குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஆண்கள் விருந்து திருவிழா:


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பபட்டி கிராமத்தில் 4,000 கிலோ அரிசி, 56 கிடாய்கள், 1,000 கிலோ கறியுடன் ஆண்களுக்கு விருந்து. ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த வினோத திருவிழாவில் கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 


இப்போதைக்கு ஓய்வில்லை


இந்திய அணிக்கு என்ன தேவையோ அதை மட்டுமே யோசித்து முடிவு எடுக்கிறேன்; நான் எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பதை வெளியில் இருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது, இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.


சிறும் உடல் ஒப்படைப்பு:


விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில், கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.