எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்
அதிமுக ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டிய உடனே இடிந்து விழுந்த வரலாறும் உண்டு. கனமழை வெள்ளம் மற்றும் பிற உபரி நீரும் சேர்ந்து அகரம்பள்ளிபட்டு பாலத்தின் மேற்பரப்புக்கு மேல் 4 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் ஓடியது. இந்த பாலத்தின் நீர் வெளியேற்றும் திறன் விநாடிக்கு 54,000 கன அடி- ஆனால், 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத பேரிடர் காரணமாக பாலம் உடைபட்டுள்ளது - எ.வ. வேலு
மருத்துவ கல்லூரி விடுதியில் ராகிங்
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவர்களை Home Work எழுதச் சொல்லி ராகிங் செய்த விவகாரத்தில், 3ம் ஆண்டு மாணவர்கள் மூவரை விடுதியில் இருந்து 6 மாதங்கள் நீக்கியும், தலா ₹25,000 அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல்
தென்னக ரயில்வேயில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே சென்னை உள்பட 29 இடங்களில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. SRMU, DREU, SRES இடையே கடும் போட்டி நிலவுகிறது. DRKS, RMU என மேலும் 2 சங்கங்களும் களத்தில் உள்ளன அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலைய விரிவாக்கம் - மதுரையில் மீண்டும் தர்ணா
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலங்கள் கையகப்படுத்துவதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரி, சின்ன உடைப்பு கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீண்டும் கிராமத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்! தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வருகிற 11ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் துணை முதலமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு
பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்-ஐ பொற்கோயிலில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி. நூலிழையில் அவர் உயிர் தப்பிய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். மதரீதியான தண்டனையாக பொற்கோயிலில் தூய்மை மற்றும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
ஆந்திரா, தெலங்கானாவில் மிதமான நிலநடுக்கம்
தெலங்கானாவின் ஐதராபாத், ஹனுமகொண்டா, கம்மம், பத்ராத்ரி கொத்தகுடேம் உள்ளிட்ட இடங்களிலும், ஆந்திராவின் விஜயவாடா, ஜக்கையாபேட்டை, திருவூரு, கம்பாலகுடேம் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது.
இன்று சம்பல் செல்கிறார் ராகுல் காந்தி
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் முகலாய காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதியை, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டபோது நடந்த இஸ்லாமியர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் 4 இஸ்லாமியர்கள் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி இன்று நேரில் சந்திக்க உள்ளார்.
ட்ரம்புக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்பின் அறிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்பு. பிணைக் கைதிகளை விடுவிக்கும் போராட்டத்திற்கு வலிமை சேர்ப்பதாக ட்ரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
6 மணி நேரத்தில் அவசர நிலை நீக்கம்
தென்கொரியாவில் அவசர நிலையை அமல்படுத்தும் தனது உத்தரவை, அந்நாட்டு அதிபர் வெறும் 6 மணி நேரத்திலேயே திரும்பப் பெற்றார். கடும் எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளார். அதேநேரம், அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டுன் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.
முழு உடல்தகுதியுடன் முகமது ஷமி
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, காயத்திலிருந்து முழுமையக மீண்டுள்ளார். கடந்த 11 நாட்களில் 6 உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் முழு உடல்தகுதியை நிரூபித்துள்ள ஷமி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.