India Road Trip: இந்தியாவில் எந்தெந்த மாதத்தில் எந்த பகுதிகளுக்கு சாலை பயணங்கள் மேற்கொள்ளலாம் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன


இந்தியாவில் சாலை பயணங்கள்:


புத்தாண்டு நெருங்கிவிட்டது. இந்த 2025 ஆம் ஆண்டில் உங்கள் துணைவி அல்லது நண்பர்களுடன் சாலைப் பயணம் செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான அட்டவணை கீழே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் எந்த நேரத்தில் நீங்கள் எங்கு சென்றால் சிறப்பான அனுபவத்தை பெற முடியும் என்பத இந்த அட்டவணை விளக்குகிறது. அதன்படி, ஜனவரி முதல் டிசம்பர் வரை எந்த நேரத்தில் சாலைப் பயணம் செல்வது நல்லது.  அவை எவ்வளவு தூரம், எத்தனை மணி நேரம் ஆகும் உள்ளிட்ட அனைத்து விவரங்களும், கீழே விவரிக்கப்பட்டுள்ளன.



எந்த மாதத்தில் எங்கு பயணிக்கலாம்?


ஜனவரி - மங்களூரில் இருந்து கோவா வரை:


ஜனவரியில் சாலைப் பயணம் மேற்கொள்ள விரும்பினால், மங்களூரில் இருந்து கோவா செல்லலாம். தூரம் 343 கி.மீ. பயணம் 6 முதல் 7 மணி நேரம் ஆகலாம். நீங்கள் செல்லும் வழியில் கார்வார் கடற்கரை, பலோலம், பாகா மற்றும் கலங்காட் கடற்கரைகளை கண்டு மகிழலாம். இந்த கடற்கரைகளில் சர்ஃபிங் மற்றும் பாராகிளைடிங் போன்ற நீர் விளையாட்டுகளை நீங்கள் விளையாடலாம். கோவா கர்நாடக எல்லையில் உள்ள துத்சாகர் நீர்வீழ்ச்சி உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரும். பாரம்பரிய உணவுகளை உண்ணலாம். கோவாவில் இரவு வாழ்க்கையை அனுபவிக்கலாம். 


பிப்ரவரி - புஜ் முதல் தோலாவிரா வரை:


பிப்ரவரியில் புஜ்ஜில் இருந்து தோலாவிரா வரை சாலைப் பயணத்திற்குச் சென்றால், உங்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கலாம். இந்தப் பயணம் 130 கி.மீ. 3 மணி நேரத்தில் சென்றடையலாம். தோலாவிராவில் பழங்கால சிந்து சமவெளி நாகரிகத்தைப் பார்க்கலாம். கட்டாயம் பார்க்க வேண்டிய அருங்காட்சியகம். அங்குள்ள கலைப்படைப்புகள் உங்களை மிகவும் ஈர்க்கும். கட்ச் அருகிலுள்ள இடங்கள் மனதைக் கவரும். 


மார்ச் - மூணாறு முதல் வாகமன் வரை:


மார்கழி மாதம் மூணாறில் இருந்து வாகமன் செல்லலாம். அது ஒரு சிறிய சாலைப் பயணம். ஆனால் நல்ல அனுபவத்தை தருகிறது. இந்த 93 கிலோமீட்டர் பயணத்தை இரண்டரை மணி நேரத்தில் முடிக்க முடியும். இந்தப் பயணத்தில் மலைகளை கடந்து பயணிக்கலாம். தேயிலை தோட்டங்கள், புல்வெளிகளை உங்கள் மனம் எதிர்பார்க்கும் ஓய்வை வழங்கலாம்.  அங்குள்ள மலைகள் மற்றும் பைன் காடுகள் மிகவும் அழகாக காட்சியளிக்கின்றன. புகைப்படங்களுக்கும் ஏற்ற இடம். நீர்வீழ்ச்சிகளுடன் வாகமானில் இயற்கையின் அழகை ரசிக்கலாம். 


ஏப்ரல் -  ஜம்மு முதல் குல்மார்க் வரை


ஏப்ரல் மாதத்தில் ஜம்முவிலிருந்து குல்மார்க்கிற்கு சாலைப் பயணம் மேற்கொள்வது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த 294 கி.மீ தூர பயணத்தை ஆறு மணி நேரத்தில் கடக்கலாம். காஷ்மீர் பள்ளத்தாக்குகள் வழியாக வாகனம் ஓட்டுவது சொர்க்க உணர்வைத் தரும். குல்மார்க்கில் உள்ள ஸ்கை ரிசார்ட்டை நீங்கள் பார்வையிடலாம். இது இந்தியாவின் சிறந்த ஸ்கை ரிசார்ட்டுகளில் ஒன்றாகும். அஃர்வத் மலையின் உச்சியிலிருந்தும் அதே காட்சிகளைக் காணலாம். 


மே - காங்டாக் முதல் குருடோங்மர் வரை:


மே 2025 இல் நீங்கள் காங்டாக்கிலிருந்து குருடோங்மருக்கு பயணிக்கலாம். 180 கிமீ தூர பயணம் 5 மணி நேரத்திற்கு நீளும். இது சிக்கிம் இமயமலையிலிருந்து காரில் பயணம் செய்யும் அனுபவத்தை வழங்குகிறது. குருடோங்மார் ஏரியைக் காணலாம். உலகின் மிக உயரமான ஏரிகளில் இதுவும் ஒன்று. இந்த சாலைப் பயணத்தில் மலைகளுக்கு இடையே செல்லும் போது பல அழகான இடங்களை நீங்கள் காண முடியும். கோடையில் சாலைப் பயணத்திற்கு இது சிறந்த தேர்வாகும்.


ஜூன் - சிம்லா முதல் காசா வரை:


சிம்லாவிலிருந்து காசா வரையிலான 408 கி.மீ பயணம் ஜூன் மாதத்திற்கான சிறந்த பயண அனுபவமாக அமையலாம். சாலைப் பயணம் சுமார் 10 மணி நேரம் நீளும். இமாச்சல பிரதேசத்தில் இமயமலையின் காட்சியை ரசித்துக் கொண்டே இந்தப் பயணத்தை முடிக்கலாம். காஜா கிராமம் அழகான மலைகளால் சூழப்பட்டுள்ளது. இவை உங்களுக்கு சிறந்த அனுபவத்தைத் தரும். அருகில் உள்ள மடத்தையும் பார்க்கலாம். 


இதில் முதல் 6 மாதங்களுக்கான விவரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான, ரோட் ட்ரிப் பகுதிகளை அடுத்த பாகத்தில் காணலாம்.