ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்


காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றியவர் என அரசு புகழாராம். இன்று மாலை இளங்கோவனின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.


அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கும்?


பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமயில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதோடு கட்சியை வலுப்படுத்துவதும் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இன்று உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி


வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வட மேற்கு திசையில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தாக்கல் செய்யப்படாது


”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில், அந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பாஜக அரசு முடிவை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.


ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் எப்போது?


ஜனவரி மாதம் 10-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனத்துக்கு விரிவான ஏற்பாடுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் அதிகாரிகள், முன்னாள் அரசியல் தலைவர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதில்லை.


இந்தியாவில் அதிக சாலை விபத்துகளை சந்திக்கும் மாநிலங்கள்


2024ல் நாட்டிலேயே சாலை விபத்துகளால் உத்தரபிரதேசத்தில் அதிக உயிரிழப்புகள் (23,652 பேர்) நிகழ்ந்துள்ளன. அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 18,437 பேர் உயிரிழப்பு. 2022ல் மொத்தம் 3.59 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 64,105 ஆகும் -நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த தகவல்


இன்று இந்தியா வருகிறார் இலங்கை அதிபர்


3 நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க. டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பேச உள்ளதாக தகவல். தமிழக மீனவர் பிரச்னை குறித்து தீர்வு காண வேண்டும் என திமுக எம்.பிக்களும் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்திய சுற்றுலாப்பயணிகளின் வருகை சரிவு; சீனர்களை குறிவைக்கும் மாலத்தீவு


நடப்பு நிதியாண்டில் மாலத்தீவிற்கான இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. சீன சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் மாலத்தீவு கவனம் செலுத்துகிறது. அதன்படி அடுத்த மாதம் (ஜனவரி) முதல் பீஜிங், ஷாங்காய், செங்டு மற்றும் ஜியான் நகரங்களுக்கு பெரிய விமானங்களை இயக்க மாலத்தீவு முடிவு செய்துள்ளது


இந்தியா தடுமாற்றம்


இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் காபா டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டதை அடுத்து, இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலியா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தாலும், டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தியுள்ளார். ஸ்மித் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தடுமாறி வருகிறது.


இங்கிலாந்து திணறல்


நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறல். 3வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 347 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது நியூசிலாந்து அணி.