ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் கடந்தாண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார், அவரது இந்த சாதனையை ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடியது.
இதையடுத்து, அவரை கவுரவிக்கும் விதமாக நாளை கொண்டாடப்பட உள்ள நாட்டின் 73வது குடியரசு தின விழாவில் அவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பரம்விசிஷ்ட சேவா பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசு தின விழாவை முன்னிட்டு ராஷ்ட்டிரிய பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் 12 சவுரிய சக்ரா, 29 பரம விசிஷ்ட சேவா பதக்கங்கள், 4 உத்தம் யுத்சேவா பதக்கங்கள், 53 அடிவசிஷ்ட சேவா பதக்கங்கள், 13 யுத்சேவா பதக்கங்கள், 3 வசிஷ்ட சேவா பதக்கங்கள் உள்பட 384 பாதுகாப்பு படை வீரர்களுக்கு வீர,தீர மற்றும் இதர செயல்களுக்காக இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
இந்திய ராணுவ வீரர்களுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த 2016ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் அலுவலராக இணைந்தார். இந்திய ராணுவத்தின் மிகவும் பழமையான ரெஜிமண்டான ராஜ்புத் ரெஜிமெண்டில் சுபேதராக பதவி வகிக்கிறார்.
ராணுவத்தில் ஜூனியர் கமிஷண்ட் ஆபீசர் 20 ஆண்டுகள் பணியாற்றியனால்தான் சுபேதாராக பதவி உயர்வு வழங்கப்படும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற வெற்றி காரணமாக நீரஜ் சோப்ராவிற்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது.
நீரஜ் சோப்ரா ஏற்கனவே 2018ம் ஆணடு அர்ஜூனா விருதை வென்றுள்ளார். பின்னர், 2020ம் ஆண்டு விசிஷ்ட சேவா பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், விளையாட்டு உலகின் மிகப்பெரிய விருதான கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளதால் அவருக்கு சுபேதாரில் இருந்து மேஜராக பதவி உயர்வு வழங்கப்படும். நீரஜ் சோப்ரா உலக சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக், காமன்வெல்த் ஆகிய போட்டிகளில் பங்கேற்பதற்காக கலிபோர்னியாவில் பயிற்சி பெற்று வருகிறார்.
மேலும் படிக்க : Watch Video: இதுதான் புஷ்பா நடை.. ஸ்ரீவள்ளி பாடலுக்கு அசத்தல் ஸ்டெப் போட்ட ப்ராவோ.! வைரல் வீடியோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்